கண்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் செயல்கள்!
Page 1 of 1

சில நேரங்களில் நாம் செய்யும் ஒருசில செயல்களாலேயே கண்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது தெரியாது. அதிலும் அது சாதாரணமான விஷயங்களாகத் தான் இருக்கும். இவ்வாறு கண்களுக்கு அதிகமான அளவில் கஷ்டம், அழுத்தம் போன்றவை தருவதால், வேறு பல நோய்களும் உடலில் வருகின்றன. மேலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் விரைவிலேயே கண்களுக்கு கண்ணாடியை போட வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறு கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால், கண்கள் பெரிதும் பாதிக்கும் நிலை கூட ஏற்படும். அதிலும் கண்ணாடிப் போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு தான் அதிகரிக்கும். அவ்வாறு கண்ணாடிப் பவரின் அளவு அதிகரிப்பதை வைத்து, கண்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
ஆகவே கண்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, கண்களை முறையாக பராமரித்து, எந்த செயல்களால் கண்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்து, தெளிவாக பார்வையை பெறுவோம். சரி இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!
தூங்கிக் கொண்டு படித்தல்
படிக்கும் பழக்கமம் நிறைய பேருக்கு இருக்கும். அதற்காக படுக்கையில் படுக்கும் போது கூட படிக்க கூடாது. ஏனெனில் அவ்வாறு படுக்கும் போது தூங்கினால், அவை கண்களுக்கு மிகுந்த தொந்தரவைத் தரும். எப்படியெனில் படுக்கும் போது படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
கம்ப்யூட்டர் பார்ப்பதால்
தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்த்து வேலை செய்வதாலும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆகவே அவ்வாறு கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது பிரச்சனை வராமலிருக்க, கண்களுக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு வேலை செய்வது நல்லது.
பயணத்தின் போது படிப்பது
பயணத்தின் போது போர் அடிக்கும் என்பதால் புத்தகத்தைப் படிக்கலாம் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் அது மிகவும் தவறானது ஒரு பழக்கம். அவ்வாறு படிக்கும் போது கண்கள் மிகவும் பாதிக்கப்படும். ஏனெனில் அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆகவே அப்போது கண்களுக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படும்.
சூரிய வெளிச்சம்
வெளியே அளவுக்கு அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும் போது, கண்களை சரியாக திறக்க முடியாமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள், கண்களைப் பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வைக் கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும் போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்ல வேண்டும்.
நைட் ட்ரைவிங்
இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் அல்லவா? இதற்கு காரணம், இரவில் வண்டிகளை ஓட்டும் போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால், அப்போது ரோட்டை சரியாக பார்த்து கவனமாக ஓட்டுவதற்கு, கண்களுக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது
டிவி பார்ப்பது
டிவியும், கம்ப்யூட்டரைப் போன்று தான் கண்களுக்கு பிரச்சனையைத் தரும். அதிலும் எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இந்த நேரம் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், மிகுந்த தலைவலி கூட ஏற்படும்.
ஊசியில் நூல் கோர்த்தல்
ஆச்சரியம், ஆனால் உண்மை. தையல் இயந்திரத்தில் தைக்கும் போது, ஊசியில் நூலைக் கோர்ப்பதற்கு முழு கவனத்துடன், கண்கள் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை சரியாக உற்று பார்க்க வேண்டியுள்ளது. இநத் நேரம் கண்களுக்கு மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சிலசமயங்களில் கண்களில் வலி கூட ஏற்படும்.
வேறு என்னவெல்லம் கண்களுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும் என்பது தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்கள்
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» மன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்கும் உதவுகிறது!

» மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum