இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
Page 1 of 1

தள்ளாத வயதில் ஏற்படக்கூடிய மாரடைப்பு, இப்போது 20 வயது இளைஞர்களைக் கூட பாதிக்கிறது. இதற்கு காரணம் வேறு யாருமல்ல... நாம்தான்.
நம்முடைய முறையற்ற உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை இவைகள்தான் இளம் வயதினருக்கு மாரடைப்பு வரக்காணம் என்கிறார் அண்ணாநகரில் உள்ள ஃபிரான்டயர் லைப்லைன் மருத்துவமனையின் இதய நிபுணர் சஞ்சய் செரியன்.
ஐடி, பிபீஓ நிறுவனங்களில் அதிகப்படியாக இரவுப்பணி பார்க்கும் இளைஞர்களுக்கு மாரடைப்பு வர கூடுதல் வாய்ப்பிருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை கூறுகிறார் டாக்டர் சஞ்சய் செரியன். இதைப் பற்றி இதோ அவரே நமக்கு விளக்கம் தருகிறார்...
நம் பாட்டி தாத்தா காலத்தில் சமச்சீரான உணவும், அதற்கேற்ப உடல் உழைப்பும் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் இயந்திர வாழ்வில், சமச்சீரான உணவுகளை தவிர்த்து விட்டு, துரித உணவு, உடல் பயிற்சியின்மை காரணத்தால் சிறுவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவை 2 மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.
சரியான தூக்கமின்மை, ஓய்வு இல்லாமல் உழைப்பது, மனஉளைச்சல், நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும்
மாரடைப்பு ஏற்படும். இப்போதுள்ள ஐ.டி மற்றும் பி.பீ.ஓ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவு நேரம். இதனால் பகல் முழுதும் தூங்குவார்கள். இரவில் முழித்து இருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். உடலில் தேங்கும் கொழுப்பு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட பாலமாக அமைகிறது. விளைவு மாரடைப்பு. எனவே, குழந்தைகள் மட்டும் இல்லாமல் அனைவருக்கும் கொழுப்பு சத்தான உணவை தவிர்த்து புரதம், விட்டமின்
மற்றும் மினரல் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாட்ட வேண்டும். உணவில் பச்சை காய்கறிகள் மற்றும்
பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அரிசி சாதத்தை குறைத்து கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராகும். ஊறுகாய், இனிப்பு வகைகள் குறைத்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. இரவு 7.30 மணிக்கு இரவு சாப்பாடு சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் படுக்க கூடாது. குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் கழித்து உறங்க வேண்டும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மாடி ஏற படிகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொழு, கொழு... ஆபத்தா?
பொதுவாக மது பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய கோளாறு ஏற்படும் என்ற நிலை மாறி இப்போது எந்த வித கெட்ட பழக்கம் இல்லாதவர்களையும் தாக்குகிறது. இதனை சிறுவயதில் இருந்தே தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறோம் என்பது பலருக்கு தெரியாது. கொழு கொழு
குண்டு குழந்தை தான் அழகு என்று நம்மில் பலர் தப்பாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
குழந்தைக்கு கொழுப்பு நிறைந்த உணவு மற்றும் துரித உணவுகளை சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்தி விடுகிறோம். இது குழந்தையின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு தங்க வழிவகுக்கிறது. அதன் காரணமே 20 வயதில் இதய பாதிப்பு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.
» இரு வேளையும் பல் தேய்ப்பதால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்

» தூங்கும்போது அதிக சப்தம் குறட்டையால் மாரடைப்பு அபாயம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum