மன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்கும் உதவுகிறது!
Page 1 of 1
மன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்கும் உதவுகிறது!
ஜிஞ்சர் டீ என்று அழைக்கப்படும் இஞ்சி தேநீர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளொன்றுக்கு ஒரு முறை ஜிஞ்ஜர் டீ அருந்தினாலே போதும், நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
இஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற ஒரு சக்தி வாய்ந்த வைட்டமின் உள்ளது. இது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. அதாவது நமக்கு சொல்லொணா கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது.
மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க ஜிஞ்ஜர் டீயில் நன்றாகத் தோய்த்த கர்சீப் அல்லது துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு ரிலீஃப் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்கும் உதவுகிறது!
» மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!
» மூட்டுவலியைக் குறைக்கும் உடற்பயிற்சி
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» கண்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் செயல்கள்!
» மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!
» மூட்டுவலியைக் குறைக்கும் உடற்பயிற்சி
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» கண்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் செயல்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum