விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் உணவுகளின் ரெசிபிக்கள்!!!
Page 1 of 1

எந்த ஒரு செயலை தொடங்கினாலும் முதன்மைக் கடவுளான விநாயகரை வணங்கி, பின்னரே எதனையும் தொடங்குவோம். அத்தகைய முழு முதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயக பெருமான் பிறந்த நாளான ‘விநாயகர் சதுர்த்தி திருநாள்’ நாளை கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அனைத்து வீடுகளிலும் ஒரு பெரிய பண்டிகைப் போல் இருக்கும்.
ஏனெனில் அந்த நாளன்று அனைவரும், வீடுகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, அவரை அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றால் அலங்கரித்து, அந்த அறையில் வைத்து, வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டி, கணபதிக்கு பிடித்த இனிப்புகளை வீட்டிலேயே செய்வார்கள்.
பின்னர் அந்த இனிப்புகளை அவருக்கு படைத்து, விநாயகர் துதிகளைப் பாடி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு, வீட்டில் செய்த இனிப்புகளைக் கொடுத்து மகிழ்வார்கள்.
அதிலும் குழந்தைகளுக்கு என்றால் இந்த நாள் மிகவும் சந்தோஷமாக, மகிழ்ச்சியானதாக இருக்கும். ஏனென்றால் வீட்டில் நிறைய இனிப்புக்கள் செய்வார்கள். அதிலும் கொழுக்கட்டை என்றால் போதும், வாயில் நாவூறும். ஆகவே அந்த நாளில், விநாயகரை காரணமாகக் கொண்டு, அதை எந்த ஒரு தடையும் இல்லாமல், நன்றாக சாப்பிடலாம் என்று தான்.
அவ்வாறு வீட்டில் விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் சிலவற்றை எவ்வாறு செய்வதென்று பார்த்து, அதை விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் செய்து மகிழ்வோமா!!!
பிள்ளையாருக்கு பிடித்த பூர்ண கொழுக்கட்டை!!!
கொழுக்கட்டை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிள்ளையார் தான். ஏனெனில் கொழுக்கடையை அவர் மிகவும் விரும்பி சாப்பிடுவார். அவருக்கு பிடித்த தின்பண்டம் என்றால் கொழுக்கட்டை தான். அத்தகைய கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து, விநாயகரை வரவேற்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 2 கப் (வறுத்தது)
எள் – 2 கப்
வேர்க்கடலை – 2 கப்
பொட்டுக்கடலை – 2 கப்
தேங்காய் – 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் – 100 கிராம்
உப்பு – சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய…
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய…
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
மோத்தி சூர் லட்டு
லட்டு என்றால் அனைவருக்கு ஞாபகம் வருவது திருப்பதி தான். ஏனெனில் திருப்பதி சென்றால், அங்கு பிரசாதமாக லட்டை தான் வழங்குவார்கள். அத்தகைய லட்டு வெங்கடாசலபதிக்கு மட்டும் விருப்பமானது அல்ல, முதன்மை கடவுளான விநாயகருக்கும் தான் மிகவும் பிடித்தது. அதிலும் விநாயகர் சதுர்த்தி என்று வந்தால், அனைத்து வீட்டிலும் சாமி கும்பிடுவதற்கு நிறைய பலகாரங்களை செய்வார்கள். அத்தகைய லட்டை ஈஸியாக எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப்
பால் – 500 மிலி
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
நெய் – 3 கப்
பாதாம் – சிறிது
பிஸ்தா – சிறிது
பாகுவிற்கு…
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 3 கப்
பால் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு உருக வைத்துக் கொள்ளவும். பின் அதில் பாகுவிற்கு குறிப்பிட்டுள்ள பாலை ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விடவும். அப்போது சிறிது நேரம் கழித்து மேலே நுரை போல் வரும். அந்நேரத்தில் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, நிறத்திற்கு கேசரிப் பவுடர் சேர்த்து, நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவையும், பாலையும் ஊற்றி நன்கு மென்மையாக கரைத்துக் கொள்ளவும். பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், ஒரு ஓட்டையாக இருக்கும் கரண்டியை எடுத்து, அதன் ஓட்டையில் இந்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.
* இதனால் அந்த மாவு துளி துளியாக எண்ணெயில் விழுந்து, பூந்தி போன்று பொரியும். அதனை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் இதேப்போல் செய்ய வேண்டும்.
* இப்போது பொரித்து வைத்துள்ள பூந்தியை தட்டில் போட்டு, அதன் மேல் சர்க்கரை பாகுவை ஊற்றி, பரப்பி விடவும். பின்னர் அதில் லேசாக சூடான நீரை தெளித்து, லட்டு போன்று பிடித்து வைக்கவும், பின் அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சுவையான மோத்தி சூர் லட்டு ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
» நவராத்திரிக்கு ஏற்ற 9 ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
» பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
» விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum