தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முருங்கைக்காய் வடை

Go down

முருங்கைக்காய் வடை Empty முருங்கைக்காய் வடை

Post  ishwarya Thu May 09, 2013 4:48 pm

மெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக்காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்முறை இதோ…

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – 2 கப்
பச்சை மிளகாய் – 6
முருங்கைக் காய் – 4
பூண்டு – 2 பல்
பெரிய வெங்காயம் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (ரீபைண்ட்) – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

* கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

* முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, ஆறியதும் நடுவிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.

* கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* அத்துடன் முருங்கைக்காய் சதைப் பகுதியையும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து மாவு தயாரிக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

* முருங்கைக்காய் வடை வித்தியாசமான சுவையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum