முருங்கைக்காய் சாம்பார்
Page 1 of 1
முருங்கைக்காய் சாம்பார்
தேவையான பொருள்கள்:
முருங்கைக்காய்= 4
துவரம் பருப்பு = 200 கிராம்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பெருங்காயம் = சிறிதளவு
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 3
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
புளி = எலுமிச்சை அளவு
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் குழைய வேக விட்டுக் கொள்ளவும். முருங்கைக்காயை இரண்டங்குலத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த புளியில் பச்சை மிளகாய், வெங்காயம், முருங்கைக்காய் சேர்த்து உப்பு போட்டு மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
கொதித்து பொடி வாசனை அடங்கியதும் கடைந்த பருப்பை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு இறக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, உப்புமா, பொங்கல், அடை, இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முருங்கைக்காய் சாம்பார்
» மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார்
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum