முருங்கைக்காய் கறி
Page 1 of 1
முருங்கைக்காய் கறி
தேவையான பொருள்கள்:
முருங்கைக்காய் = அரை கிலோ
வெங்காயம் = 1
பூண்டு = 10 பல்
சோம்பு = அரை ஸ்பூன்
தேங்காய் = கால் மூடி
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை அரையங்குல துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும். பூண்டை உரித்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொண்டு சோம்பு வைத்து மிக்ஸியில் அரைக்கவும். எடுக்கும் போது பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து சதசதப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் முருங்கைக்காய், அரைத்த மசாலா, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகம், உப்பு, எண்ணெய், அரை கப் தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற விட்ட பின் அடுப்பில் வைத்து வதக்கவும்.
முதலில் 5 நிமிடம் வதக்கவும். அடுத்து தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் வதக்கவும். காய் வெந்து ஓரளவு எண்ணெய் பிரிந்து சிவக்க வரும் போது இறக்கி விடவும். கறிவேப்பிலை மட்டும் சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்காய் கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா ஆகியற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கூட்டு
» முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum