ப்ரான் மேங்கோ கறி
Page 1 of 1
ப்ரான் மேங்கோ கறி
இறாலுடன் மாங்காய் கலந்த சுவை தனிரகம். சுவைத்து ருசிக்கும்போது அதை நீங்களே மணக்க மணக்க உணர்வீர்கள். ஒப்புக் கொள்வீர்கள்.
தேவையான பொருட்கள்
இறால்-400 கிராம்
தேங்காய் எண்ணெய்- 4 டீஸ்பூன்
அரை மூடி தேங்காய்- திருவி பால் எடுக்கவும்.
வெங்காயம்-3 (நறுக்கவும்)
மாங்காய்-1
காய்ந்த மிளகாய்-2
பச்சை மிளகாய்-2
தனியா-1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
(தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து அரைக்கவும்)
மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
பூண்டு-4 பல்
இஞ்சி-சிறுதுண்டு
(பூண்டு, இஞ்சி இரண்டையும் விழுதாக்கவும்)
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு தடவி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து பிரவுன் நிறத்தில் வரும் வரை வதக்கவும். அதில் சுத்தம் செய்து துண்டுகளாக்கிய மாங்காயை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
இப்போது இறாலை சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். மசாலாவுடன் சேர்ந்து இறாலும் வெந்து திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி வைக்கவும்.
இது சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum