தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மசால் தோசை பலவிதம்

Go down

மசால் தோசை பலவிதம் Empty மசால் தோசை பலவிதம்

Post  ishwarya Thu May 09, 2013 2:47 pm

உருளைக்கிழங்கு மசால் தோசை

புழுங்கல் அரிசி- 500 கிராம், பச்சை அரிசி- 100 கிராம், உ.பருப்பு- 150 கிராம், வெந்தயம் சிறிதளவு கலந்து ஊறவைத்து, தோசை மாவு தயார் செய்துகொள்ளவும். உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு- 250 கிராம், பெ.வெங்காயம்-2, ப.மிளகாய்-4, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு போன்றவைகளை எடுத்துக்கொள்ளுங் கள். இவற்றை பயன்படுத்தி மசாலா தயார் செய்யுங்கள்.

தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் மசால் தோசை

முதலில் குறிப்பிட்டிருப்பதுபோல் அரிசி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊறவைத்து அரைக்கவேண்டும். பாதி அளவு அரைபடும்போது காய்ந்த மிளகாய்-6, சீரகம்- ஒரு தேக்கரண்டி போன்றவைகளை அதில் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் போன்றவைகளை யும் தேவையான அளவு கலந்து அரைக்கவேண்டும். பின்பு அதில் கேரட், பீட்ரூட், நூல்கோல், முள்ளங்கி போன்றவைகளை தலா 75 கிராம் அள விற்கு சேர்த்து அரையுங் கள். தோசை மாவு பக்குவத்திற்கு அரைத்து, தோசையாக வார்த்து சுவைக்கலாம்.
வெஜிடபிள் டிரை ஸ்டீவ் மசால் தோசை

- தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள்

- விரும்பும் காய்கறிகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

- கொதி நீரில் உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை காய்கறியை வேகவிடுங்கள்.

- ஒரு தேங்காயில் இருந்து பாலை பிழிந்தெடுத்து, வேகவைத்த காய்கறியில் கலந்து, அடுப்பில் அரை சிம்மில் வைத்து கொதிக்கவிடுங்கள். தேவைப்பட்டால் காரத்திற்கு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேருங்கள். நன்றாக கிளறிவிடுங்கள். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் அடியில் பிடித்துவிடும். 15 நிமிடத்தில் `டிரை’ ஆகிவிடும். இந்த மசாலை தேவையான அளவு எடுத்து, தோசையில் சேர்த்து மசாலா தோசையாக சாப்பிடலாம்.
கேரட் மசால் தோசை

தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, கறிமசால் போன்றவை களை சேர்த்து உருளைக்கிழங்கு மசால் போன்று தயார் செய்யுங்கள். இது கிரேவி மாதிரி இருக்கும். இதை பயன்படுத்தி தோசை தயார் செய்து சுவையுங்கள்.
எந்த `மசால்’ நல்லது?

நமது மசால் தோசையை உலகமே சுவைப்பது மகிழ்ச்சியான விஷயம். மசால் தோசை என்றதும் உருளைக் கிழங்கு மசால்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், டீன் ஏஜினருக்கு அது சிறந்த உணவுதான். பொட்டாசியமும், மாவு சத்தும் அதில் நிறைய இருப்பது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது தான். ஆனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் அளவோடு உருளைக்கிழங்கு மசால் தோசை சாப்பிடவேண்டும்.

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் உடல்வலுவுக்கு தேவையான புரதம், அமினோ அமிலம், பலவகை வைட்டமின் சேர்ந்த உணவு பொருட்கள் நிறைய உள்ளன. அவை களை சேர்த்து மசாலா ஆக்கலாம். அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகின்றன.

அவற்றில் சில:

- சோயா பீன் மசாலா அல்லது டோபு மசாலா.

- சோயா சங்க்ஸ் மசாலா.

- வெந்தய கீரை மசாலா.

- முடக்கத்தான் கீரை மசாலா.

- பசலைக்கீரை மசாலா.

- பருப்பு உருண்டை மசாலா.

- பூசணிக்காய் மசாலா.

- ஓட்ஸ் மசாலா.

- காளான் மசாலா.

- காலிபிளவர், வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மசாலா.

- கார்ன் மசாலா.

- பீஸ் மசாலா.

மேற்கண்ட மசாலாக்களை உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் சேர்த்தால் அதிக சத்தும், சுவையும் கிடைக்கும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மாவு சத்தும், புரதச் சத்தும் தேவை. அவை இரண்டும் உளுந்து, அரிசி கலந்த தோசை மாவில் இருக்கிறது. அதனால் தோசை எல்லா வயதின ருக்கும் ஏற்றது.

நமக்கு வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நல்ல உணவுகள் நமது மூன்று விதமான தேவைகளை நிறைவேற்றவேண்டும்.

ஒன்று: நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் ஆக மாற அதிக நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியானால்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

இரண்டு: நாம் சாப்பிடும் உணவு அதிக நார்ச்சத்து நிறைந்ததாகவும், எண்ணெய் பயன் பாடு குறைந்ததாகவும் அமையவேண்டும்.

மூன்று: கலோரி குறைந்த, உடல் எடையை அதிகரிக்காத உணவு அவசியம். குறைந்த அளவே சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வை தருவதாக அந்த உணவு அமையவேண்டும்.

இந்த மூன்றுவிதமான தேவைகளை நிறைவேற்ற நமது பாரம்பரிய உணவுகளில் ருசிக்கு தக்கபடி சில மாற்றங்களை ஏற்படுத்தி உண்ணுவது நல்லது. அந்த வகையில் நார்ச்சத்து நிறைந்த முடக்கத்தான் கீரை, பசலைக்கீரை போன்றவைகளை தோசைக்கான மசால்களில் சேர்க்கவேண்டும்.

தோசை மாவுக்கு பாரம்பரியமாக அரிசி சேர்க்கிறோம். அதற்கு பதிலாக ஓட்ஸ், கோதுமை, சோயா, கடலைமாவு, கேழ்வரகு மாவு, அவல், பிரவுன் அரிசி போன்றவைகளை சேர்க்க வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் படிப்படியாக இவைகளை பயன்படுத்த வேண் டும். உடலுக்கு மிகத் தேவையான இரும்பு சத்து, கால்சியம் போன்றவை மேற் கண்டவைகளில் உள்ளன.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஒல்லியாக இருக்கும் டீன்ஏஜ் பெண்கள் தோசைக்கு முட்டை மசாலா, பாலாடைக்கட்டி மசாலா, பன்னீர் மசாலா, கோழி இறைச்சி மசாலா, மீன் மசாலா, இறால் மசாலா போன்றவைகளை தயார்செய்து உண்ணலாம். இவற்றை காலை உணவாக சாப்பிடுவது நல்லது. அதனால் உடல் இயக்கம் சிறப்பாகும்.

சிறிதளவு எண்ணெயை கலந்து வீட்டில் தயாரிக்கும் சாதாரண தோசை ஒன்றில் 100 முதல் 120 கலோரி இருக்கும். ஓட்டலில் ஒரு தோசை சாப்பிட்டால் 250 முதல் 300 கலோரி உடலில் சேரும். அது அளவில் சற்று பெரிதாக இருப்பதாலும், எண்ணெய் அதிகம் சேருவதாலும் கலோரி அதிகரிக்கிறது. அதே நேரத்தில் சோயா, ஓட்ஸ் போன்றவற்றில் தயாரான தோசை சாப்பிட்டால் 60 முதல் 80 கலோரிதான் சேரும். இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக்கொண்டு உடலுக்கு ஏற்ற விதத்தில் நாம் மசால் தோசைகளை தயாரித்து சாப்பிடவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum