மசால் சுருள் தோசை
Page 1 of 1
மசால் சுருள் தோசை
பிரும்ம வித்தை ஒன்றும் இல்லை. பழைய கரைத்த மாவை எடுத்துக் கொள்ளுங்கள். மதியம் செய்து மீந்த பொரியல் இருந்தால் அவ்வளவுதான் மசால் சுருள் தோசை ரெடி.
அடுப்பில் கல்லைக் காய வைத்து மாவை ஊறி வட்டமாகவும் மெலிதாகவும் வருமாறு தேய்த்து எண்ணெய் ஊற்றி வேகவிட வேண்டும். மூடி வைத்து சிறிது நேரம் வெந்ததும் (லேசாக பொன்னிறம் வரும்வரை வேகட்டும்) திறந்து கைவசம் உள்ள பொரியலில் ஒரு டீஸ்பூன் எடுத்து தோசை முழுவதுமாகப் பரவுமாறு பூசிவிடவும்.
ஓரமாக ஒரு இடத்தில் தோசையை தோசைக்கரண்டியால் நெம்பிவிட்டு அந்த இடத்திலிருந்து கையால் சூட்டைப் பொருத்துக் கொண்டு லேசாகச் சுருட்டவும்.
வெளியே எடுத்துச் சுருட்டினால் விரைத்துவிடும். பொரியலின் சுவையுடன் இருப்பதால் சைட் டிஷ் தனியே தேவையில்லை. வினோத வடிவில் இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி உண்பர்.
பிறகு, இதைத் தயாரிப்பதற்காகவே மறுநாள் அதிகம் பொரியல் செய்யப் போகிறீர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மசால் சுருள் தோசை
» முந்திரி மசால் தோசை
» மசால் தோசை பலவிதம்
» சமையல்:முந்திரி மசால் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» முந்திரி மசால் தோசை
» மசால் தோசை பலவிதம்
» சமையல்:முந்திரி மசால் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum