மாங்காய் பச்சடி
Page 1 of 1
மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் – அரை கிலோ, பச்சை மிளகாய் – 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சர்க்கரை – 50 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» மாங்காய் சாதம்
» மாங்காய் வேம்பு பச்சடி
» மாங்காய் சூப்
» கோடை காலத்திற்கேற்ற சத்தான மாங்காய் தயிர் பச்சடி
» மாங்காய் சாதம்
» மாங்காய் வேம்பு பச்சடி
» மாங்காய் சூப்
» கோடை காலத்திற்கேற்ற சத்தான மாங்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum