தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாங்காய் பருப்பு

Go down

 மாங்காய் பருப்பு                   Empty மாங்காய் பருப்பு

Post  ishwarya Tue Feb 26, 2013 12:52 pm

* புளிப்பு மாங்காய் - ஒன்று
* துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி
* பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
* கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
* பச்சை மிளகாய் - 2
* காய்ந்த மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 5
* பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
* கடுகு - அரை மேசைக்கரண்டி
* உளுத்தம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
* சீரகம் - கால் மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாகவோ அல்லது சீவியோ வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை லேசாக கீறி வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
step 1
பருப்பு வகைகளை கழுவி, அதனுடன் மாங்காய், கீறிய பச்சை மிளகாய், நறுக்கின சின்ன வெங்காயத்தில் பாதியளவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்றாக குழையும் வரை நான்கு விசில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.
step 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, துண்டுகளாக்கின காய்ந்த மிளகாய், நறுக்கின மீதி வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
step 3
அதில் வேக வைத்த பருப்பு, மாங்காய் கலவையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
step 4
மிகவும் சுலபமாக எளிதில் செய்யக்கூடிய சுவையான மாங்காய் பருப்பு தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum