குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு
Page 1 of 1
குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு
அறிவியல் வளர வளர அதற்குண்டான சாதகங்களும் பாதகங்களும் உண்டாகவே செய்கின்றது. ஒரு காலத்தில் பெண்கள் என்றாலே சமையல் செய்யத்தான் லாயக்கு என்ற நிலை இருந்தது. அது ஏறக்குறைய இல்லாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் பெண் குழந்தை என்று பிறந்தாலே செலவு ஆண் குழந்தை என்றாலோ வரவு என்ற எண்ணம் மட்டும் பெரிய அளவில் மாறவில்லை.
பெண்கள் பூப்பெய்துதல் மற்றும் அவர்களுக்கு தேவையான நகைகள் செய்தல், திருமணச்செலவு, வரதட்சணை, பெண்ணுக்கு குழந்தை பிறப்பு என்று அடுக்கடுக்கான செலவுகளை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் இந்த யுகத்தில் அவைகளெல்லாம் அடிபட்டுப் போகத் தொடங்கிவிட்டது. பெண்களது படிப்பு, பதவி அவர்களது ஆளுமை எல்லாம் செலவு என்ற நிலைமை மாறி ஆண்களுக்கு நிகராக அவர்களும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சாதிக்கிறார்கள்.
அடுத்த அபாயகரமான பிரச்சினை, பெண் சிசுக்கொலை, எங்காவது ஒன்றிரண்டு நமது நாட்டிலே நடைபெற்றாலும் அது மிகமிக அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. நம்முடைய நாட்டிலே அதுபோன்ற அவல நிலையே இல்லை என்ற நிலைமை உண்டாக வேண்டும். மிக முக்கிய ஒரு விஷயம் என்னவென்றால் திருமணம் என்றாலே குழந்தைப்பேறு என்பது கட்டாயம் என்றாகி விட்டது. குழந்தைப்பேறு மிகவும் முக்கியம்தான்.
திருமணம் என்ற அமைப்பு முறையில் குழந்தைப்பேறு ஒரு அங்கம் என்றுதான் கருத வேண்டும். ஆனால் குழந்தை பேறின்மையால் திருமண முறிவுகள் நடக்கின்றன. அது தவறு. திருமணம் என்பதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அதை புரிந்து கொள்ள வேண்டும். நவீன அறிவியல் யுகத்தில், கரு முட்டை தானம், உயிரணு தானம், கருதானம், வாடகைத் தாய் முறை போன்றவற்றால் இந்த உலகில் ஆண், பெண் யாருக்குமே குழந்தை இல்லை என்ற பிரச்சினையே இல்லாமல் செய்து விட முடியும்.
அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்கு, கருப்பை சுகப்படலம், கருக்குழாய் அடைப்பு, கரு முட்டைப் பை நீர்க்கட்டிகள், கருப்பை திசுக்கட்டிகள் போன்றவைகள் காரண மாகின்றன. இன்றைய சிகிச்சை முறைகளில் இவை அனைத் துக்குமே நல்ல தீர்வு உண்டு.
சமீப காலத்தில் கரு முட்டைப் பையிலிருந்து ஒரு பகுதி திசுவை எடுத்து உறை நிலைப்படுத்தி பிறகு அதனை மாற்றுவதன் மூலம் குழந்தைப்பேற்றை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு நவீன கண்டுபிடிப்பாகும் என்கிறார் பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபு ணர் டாக்டர் சாமுண்டி சங்கரி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நிரந்தர தூக்கத்தை கெடுக்கும் தூக்கமாத்திரை
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» நிரந்தர வீட்டை வாங்குவோம்
» குடல் புற்றுநோய் சிகிச்சை மருந்தினால் ஏற்படும் நிரந்தர நரம்புச் சிதைவு
» நிரந்தர புருவம் கிடைக்க
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» நிரந்தர வீட்டை வாங்குவோம்
» குடல் புற்றுநோய் சிகிச்சை மருந்தினால் ஏற்படும் நிரந்தர நரம்புச் சிதைவு
» நிரந்தர புருவம் கிடைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum