குடல் புற்றுநோய் சிகிச்சை மருந்தினால் ஏற்படும் நிரந்தர நரம்புச் சிதைவு
Page 1 of 1
குடல் புற்றுநோய் சிகிச்சை மருந்தினால் ஏற்படும் நிரந்தர நரம்புச் சிதைவு
வெள்ளி, 30 செப்டம்பர் 2011( 12:51 IST )
Share on facebookShare on twitterMore Sharing Services
பெருங்குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு இப்போது உலகெங்கும் கொடுக்கப்படும் ஒரு மருந்து ஆக்சாலிபிளாட்டின் (Oxaliplatin). இந்த மருந்தை உட்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை முடிந்த பல்நாட்களுக்குப் பிறகும் கூட நிரந்தர நரம்புச் சேதம் ஏற்படுகிறது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்சாலிபிளாட்டின் மருந்தினால் குடல் புற்றுநோய் முற்றிய நிலையிலும் நோயாளிகள் ஓரளவுக்கு நிதானமான ஆரோக்கியத்துடன் உயிருடன் இருக்கும் நாட்கள் மாதங்களிலிருந்து வருடங்களாக உயர்ந்துள்ளது. அதனால்தான் இந்த மருந்திற்கு உலகெங்கும் இவ்வளவு கிராக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த மருந்தைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சைப் பெற்றவர்கள் பலருக்கு கை, கால் வலி, தொண்டைப்பகுதியில் உணர்ச்சியின்மை ஏற்படுவதால் விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த ஆயவிற்கு மிகவும் முற்றிய நிலையில் இருந்த குடல் புற்று நோயாளிகள் 8 பேரை பயன்படுத்தினர். ஆக்சாலிபிளாட்டின் கொடுப்பதற்கு முன்பு இவர்களிடத்தில் முழு நரம்புப் பரிசோதனை செய்யப்பட்டது. 6மாதங்கள் வரை இந்தச் சோதனை செய்யபட்டது. அப்போது இவர்களின் நரம்பு மண்டலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது தெரியவந்தது. நரம்புச் செல்களின் நீளமான நீட்சியான 'ஆக்சன்ஸ்' கடுமையாக பழுதடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
180 நாட்களுக்குப் பிறகு புற்றுநோய் சிகிச்சை முடிந்த பிறகும் 8 நோயாளிகளின் முக்கிய நரம்புகள் பழுதடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆக்சாலிபிளாட்டின் மருந்தை எடுத்துக் கொண்டு புற்றுநோய் சிகிச்சை பெற்றுக் கொண்டே நீண்ட காலம் உயிருடன் வாழ்பவர்களுக்கு இந்த நரம்புச் சிதைவு ஏற்பட்டால் ஆக்சாலிபிளாட்ட்டினின் மருத்துவத்தால் என்ன பயன் என்று இந்த ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே நரம்புச் சிதைவை தடுக்க அதனை முதலில் கண்டு பிடிக்க தோல் பயாப்ஸி செய்யலாம். இது மலிவானதுதான் என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுதும் குடல் புற்றுநோய் சிகிச்சையில் கொடிகட்டி பறந்து வரும் ஆக்சாலிபிளாட்டின் மருந்துகள் புற்றுநோய் கீமோதெரபியில் (Chemotherapy) பயன்படுத்தப்படுவதாகும். பிளாட்டின மூலக்குறுகள் இதில் இருப்பதால் ஆக்சாலிபிளாடின் என்று பெயரிடப்பட்டுள்ளது. குஅலில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளுக்கு இந்த மருந்து அபாரமாக வேலை செய்வதாக மருத்துவ ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இந்த ஆக்சாலிபிளாட்டின் பல்வேறு வணிகப்பெயர்களில் வந்துள்ளது. கெடிலாவின் கினாபிளாட், கிளென்மார்க் நிறுவனத்தின் கிளெனோக்சால்,, டாக்டர் ரெட்டி லெபாரட்டரீஸ் டேகோடின் ஆகியன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வணிகப்பெயர்களுடன் இந்தியாவில் புற்றுநோய் கீமோதெரபியில் பயன்படுத்தப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடல் புற்றுநோய் சிகிச்சை மருந்தினால் ஏற்படும் நிரந்தர நரம்புச் சிதைவு
» மார்பகப் புற்றுநோய்: இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய்: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை
» கர்ப்பப்பை கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்
» தினம் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தாலே மார்பக புற்றுநோய் ஏற்படும்
» மார்பகப் புற்றுநோய்: இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய்: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை
» கர்ப்பப்பை கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்
» தினம் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தாலே மார்பக புற்றுநோய் ஏற்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum