தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிரந்தர தூக்கத்தை கெடுக்கும் தூக்கமாத்திரை

Go down

நிரந்தர தூக்கத்தை கெடுக்கும் தூக்கமாத்திரை Empty நிரந்தர தூக்கத்தை கெடுக்கும் தூக்கமாத்திரை

Post  ishwarya Thu Feb 28, 2013 1:09 pm

தூக்கமின்மை என்பது உடலுக்குத் தேவையான அளவு தூக்கம் வராமல் இருபதற்கான அறிகுறி ஆகும். எனவே, உறக்கமின்மையை ஒரு நோயாக நம்மால் கருத முடியாது. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறை 2007 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 64 மில்லியன் அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் 41% அதிகம் காணப்படுகின்றது. தூக்கத்தை வர வழைப்பதற்காக மாத்திரை உட்கொள்ள கூடாது. ஆழ்ந்த உறக்கத்திற்காக பயன்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள் உயிரையே பறித்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்கா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 23,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 10,500 பேர் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் என ஆய்வில் தெரிந்தது. தூக்க மாத்திரை சாப்பிட தொடங்கிய இரண்டரை வருடத்தில் பலவிதமான நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இவர்களில் 35 சதவீதம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வது உடல் நலத்துக்கு ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துபவர்கள் தங்களது மருத்துவர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். எனவே தூக்கமின்மைக்கு தூக்கமாத்திரை ஒரு தீர்வாக அமையாது என்பதை அறிந்துக் கொள்வது அவசியம்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum