பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை
Page 1 of 1

முப்பது வயதை தொட்ட பெண்கள் சிலருக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிலக்கு வருகிறது. அதுவும் ஒரு நாள் மட்டும் சிறிதளவு வெளிப்படும். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அதிக சோர்வு, அதிக தாகம், உடல் சூடு போன்றவை ஏற்படுகிறது. உடலும் தளர்ந்து போகிறது. பொதுவாக 45 வயதுக்கு மேல்தான் மாதவிலக்கு நின்றுபோகும் `மேனோபாஸ்' உருவாகும் என்பார்கள்.
மேற்கண்ட அறிகுறிகள் முப்பது வயதிலே `மேனோபாஸ்' ஏற்படுவதற்கான அறிகுறியா? என்ற எண்ணம் பெண்கள் மனதில் ஏற்படுகிறது. மாதவிலக்கு முழுமையாக நின்று போவது பொதுவாக 45 வயதுகளில் தான் என்றாலும், சிலருக்கு 35 வயதில் கூட மாதவிலக்கு நிலைத்து போகிறது. அரிதாக சில பெண்களுக்கு 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு தொடர்கிறது.
உங்கள் பாட்டிக்கு, உங்கள் அம்மாவுக்கு மாதவிலக்கு எந்த வயதில் நின்றது என்று கேட்டுப் பாருங்கள். இதற்கும் பாரம்பரிய தொடர்பு இருக்கிறது. பொதுவாகப் பார்த்தால் மாதவிலக்கு நாட்களில் உடல் அதிக சூடு அடைவது மேனோபாஸ் அறிகுறி தான். ஆனால் அதிக சோர்வு, அதிக தாகம், உடல் தளர்ச்சி என்று நீங்கள் கூறுவது சர்க்கரை நோய் பாதிப்பின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
மாதவிலக்கில் வெளிப்படும் உதிரத்தின் அளவு படிப்படியாக அடுத்தடுத்த மாதங்களில் குறைந்து கொண்டே போவது- பின்பு அடுத்தடுத்த மாதங்களில் வராமல் அதிக இடைவெளி ஏற்படுவது- இடைவெளிவிட்டு வரும்போதும், ஒன்று அல்லது இரண்டு நாள் மட்டும் மிகக் குறைந்த அளவில் வெளிப்படுவது..
போன்றவை `மேனோபாஸ்' அறிகுறிகள். ஆனாலும் நீங்கள் மகப்பேறு டாக்டரை சந்தித்து அதற்கான பரிசோதனையை செய்து உறுதிப்படுத்துங்கள். மேனோபாஸ் மூலம் உடலில்- மனதில் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைக்க `ஹார்மோன் தெரபி' சிகிச்சை கை கொடுக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
» பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்
» பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்
» பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
» பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
» பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்
» பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்
» பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்
» பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum