தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்

Go down

 பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்  Empty பயத்தால் ஏற்படும் மாதவிலக்கு சிக்கல்

Post  meenu Thu Jan 24, 2013 11:39 am

கல்வி, வேலை, வாழ்க்கை சூழல் போன்ற பல நிலைகளில் பெண்களுக்கு பயம் ஏற்படலாம். பயத்தால் மாதவிலக்கு தள்ளிப்போகும் போது சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். தலை மற்றும் மார்பகப் பகுதிக்கு வரும் ரத்த ஓட்டம் குறைவது போல் தோன்றும். அந்த பகுதிகள் இறுக்கமாவது போன்ற உணர்வு ஏற்படும். அதிக சோர்வு, மயக்கம், வாந்தி வருவது போன்றும் தோன்றும்.

பொதுவாகவே மாதவிலக்கு கோளாறுகள் கொண்டவர்களுக்கு தலைக்குள் எதுவோ நீந்துவது போன்றிருப்பது, முன்நெற்றியில் பாரம்- அழுத்தம் தோன்றுவது, மார்பு வலி, வறட்டு இருமல், மூக்கில் இருந்து ரத்தம் வழிதல், பித்த வாந்தி, சாப்பிட்ட பின்பு வயிற்றில் வலி, பின்பக்கத்தில் வலித்தல், மலச்சிக்கல், இதய படபடப்பு, வயிற்றை இறுக்கிப்பிடிப்பது போன்ற அறிகுறிகள் உருவாகும்.

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் அதிக வலியாலும் அவதிப்படுவதுண்டு. இந்த வலி அடி வயிற்றில் இருந்து ஆரம்பிக்கும். வலி அதிகரித்து படுக்கையில் விழுந்து புரளவேண்டும் என்பதுபோல் தோன்றும். சிலர் அழுதுவிடுவார்கள். கருப்பை நரம்பு அழுத்தப்படுவதால் தாங்கமுடியாத வலி ஏற்படுகிறது. தொடையின் கீழ் பகுதி வலித்து, படுக்கவும் முடியாமல் இடுப்பை பிடித்துக்கொண்டு அவதிப்படும் பெண்களும் உண்டு. அப்போது குமட்டலும் வரும்.

இப்படி பெண் அவஸ்தைபட்டுக்கொண்டிருக்கும்போது மெதுவாக அவர்களுக்கு மாதவிலக்கு உதிரப்போக்கு ஏற்படத் தொடங்கும். கருப்பை பலகீனமாக இருந்தாலும், அடிக்கடி கருச் சிதைவு ஏற்படும் நிலை இருந்தாலும், குளிர் பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்தாலும், அதிகமான மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தாலும் வலி நிறைந்த மாதவிலக்கு தோன்றக்கூடும். அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுதல், ஒரு வாரத்திற்கு மேலும் உதிரப்போக்கு தொடருவதற்கு என்ன காரணம்?

ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை, கருப்பையில் தொற்றுக்கிருமி தொந்தரவு ஏற்படுதல், கருச்சிதைவு ஏற்படுதல், கருப்பையில் கட்டி ஏற்படுதல், கருத்தடை சாதனம் பொருத்தியிருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு போன்றவைகளால் அதிக உதிரப்போக்கு, அதிக நாள் உதிரப்போக்கு தோன்றும்.

அதிக உதிரப்போக்கு இருந்தால், காரணத்தை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெறவேண்டும். துர்நாற்ற மாதவிலக்கும் ஏற்படுவதுண்டு. சில பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை சரியான சுழற்சியில் மாதவிலக்கு வராமல், காலம் தள்ளிப்போய் வரும். அப்போது இயல்புக்கு அதிகமான உதிரம் வெளியேறும். துர்நாற்றமும் வீசும்.

அந்தப் பெண்கள் அடிவயிற்றில் இருந்து ஆரம்பித்து முதுகு நோக்கி பரவும் வலியால் அவதிப்படுவார்கள். குமட்டல், பதட்டம், காதில் இரைச்சல், முகத்தில் வலி போன்றவைகளாலும் அவர்கள் பாதிக்கப்படலாம். இந்த பாதிப்பு மாலை நேரத்தில் அதிகரித்து பின்பு கட்டுப்படும். டீன்ஏஜ் பெண்களுக்கு மாதவிலக்கு சிக்கல் ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

அதற்கு சரியான சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனாலும் அலட்சியத்தாலும், தயக்கத்தாலும் பெண்கள் காலந்தாழ்த்துகிறார்கள். காலந்தாழ்த்துவது அவர்கள் ஆரோக்கியம், கல்வி, எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum