தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களை தாக்கும் நீரிழிவு நோய்

Go down

பெண்களை தாக்கும் நீரிழிவு நோய் Empty பெண்களை தாக்கும் நீரிழிவு நோய்

Post  meenu Wed Jan 23, 2013 12:29 pm

இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம். ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயது: ஒரு குழந்தைக்கு அல்லது இளவயதினருக்கு வருவதை விட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாக தெரிகிறது.

வயது வருடங்களில் பத்தாயிரம் பேரில் நீரிழிவு உள்ளவர்கள் 1-20 வயதிற்குள் 4, 20-40 வயதினர் 15 பேர், 50-60 வயதினர் 100 பேர், 60-70 வயதுடையோர் ஆயிரம் பேர். இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளவயது நீரிழிவு நோய் (முதல் வகை) ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர் வயது நீரிழிவு (இரண்டாவது வகை) ஆண்களை விட பெண்களை சற்றே அதிகமாக பாதிக்கிறது. பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது நீரிழிவு வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.

இந்த கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 45 முததல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்களை இந்த நோய் தாக்குகிறது.

பெண்கள் பெண்களில் இதற்கு நேர் எதிர்மறையான நிலை காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து செய்து கொண்ட குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு இந்த நோய் அதிகம் வருவதில்லை.திருமணமான பெண்களுக்கே அதிகம் வரும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum