இளம்பருவ பெண்களை அதிகம் தாக்கும் பி.சி.ஓ.எஸ். நோய்
Page 1 of 1

இளம்பருவ பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய் இது. இதன் விரிவாக்கம், `பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம்'. பெண்ணின் சினைப்பையை சுற்றி நீர்கோர்த்த கட்டிகளாக இது தோன்றும். இதனால் சினைமுட்டை முதிர்ந்து, வெடித்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் தாய்மை அடைவதில் சிக்கல் ஏற்படும். இந்தியாவில் இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் அதிகம்.
குறிப்பாக தமிழ்நாட்டு இளம்பெண்கள்தான், இந்தியாவிலே இந்த நோயின் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்த நோய் வந்தால் உடல் குண்டாகவும், வயிற்றுப் பாகம் பெரிதாகவும் தோற்றமளிக்கும். முகத்தில் பருவும், மீசையும் வளரும். கழுத்து, அக்குள் இன்னும் சில பகுதிகளும் கறுப்பு நிறத்துடன் காட்சியளிக்கும். மாதவிடாய் பிரச்சினை ஏற்படும். தலைமுடி உதிரும். எப்போதும் சோர்வு இருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களின் தாக்குதல் வெளிப்புறத்தில் தெரியாது. ஆனால் இந்த நோய், வெளிப்புறத்தில் பல்வேறு தோற்ற மாறுதல்களை ஏற்படுத்துவதால், பாதிக்கப்பட்ட பெண்கள் கேலிக்கு உள்ளாகவும், தன்னம்பிக்கையை இழந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகவும் செய்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களில் இதுவும் ஒன்று. இதற்கும் சிகிச்சை உள்ளது.
பி.சி.ஓ.எஸ். ஏற்பட மூன்று விதமான காரணங்கள் உள்ளன.
ஒன்று: ஹார்மோன் சமச்சீர் இல்லாமை.
இரண்டு: பாரம்பரியம்.
மூன்று: பொருத்தமற்ற உணவுகளை சாப்பிடுதல்.
இதற்கான தீர்வுகளும் மூன்று விதமாக உள்ளன.
முதலில் நோய்த்தன்மை எப்படி இருக்கிறது என்று பரிசோதித்து கண்டறிய வேண்டும். சிலருக்கு முறையான உடற்பயிற்சியும், முறையான உணவுப்பழக்கமுமே நிவாரணத்தை தந்துவிடும். சிலருக்கு குறைந்த கால அளவில் மாத்திரைகள் சாப்பிட்டாலே போதும். பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டும் லோப்ராஸ்கோபிக் போன்ற சிகிச்சைகள் தேவைப்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் மகப்பேறு நிபுணரை சந்தித்து உடனே தேவையான ஆலோசனைகளைப் பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
» பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு மெலிவு நோய்
» பெண்களை தாக்கும் இதய நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum