பெண்களை தாக்கும் இதய நோய்
Page 1 of 1
பெண்களை தாக்கும் இதய நோய்
பெண்களுக்கு ஏற்படும் பணிசுமை பற்றிய ஆய்வில் பணிக்குச் செல்லும் 70 சதவிகித பெண்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 40 சதவிகித பெண்கள் இதயம் தொடர்பான நோயினால் பாதிப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்குக் காரணம் பெண்களுக்கு ஏற்படும் பணிச்சுமைதான்.
பணியில் அழுத்தம் உள்ள பெண்களுக்கு மாரடைப்பு, இதயஅடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம் என்றும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் வேலைச்சுமை அழுத்தம், வேலை பாதுகாப்பின்மை, பணியில் ஏற்படும் டார்ச்சர் பற்றி தொடர்ந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.
இவர்கள் அளித்த பதிலின் அடிப்படையில், அதிக வேலைச்சுமை அழுத்தமுடைய பெண்களுக்கு, மாரடைப்பு மற்றும் தமனிகளில் இரத்த அடைப்பு பாதிப்பிற்கான வாய்ப்பு 40 சதவீதம் இருந்து தெரிய வந்தது. வேலைசுமை உள்ள பெண்களின் இதய ஆரோக்கியம் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்தில் பாதிக்கப்படுகிறது என்றும் இந்த ஆய்வில் கூறியுள்ளார்.
ஒருவரின் உடல் ஆரோக்கியத்தில் வேலைச்சுமை சாதக, பாதக நிலைகளை ஏற்படுத்துகிறது. சுமை நிறைந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வேலைச்சுமை மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்கும் வேலையில் தனிப்பட்டவரின் திறனை முடிவு எடுக்கும் வாய்ப்பை குறைக்கிறது. அதேசமயம் இது நேரடியாக பெண்களின் மாரடைப்பு, பக்க வாதம், இறப்புக்கு வழிவகுப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை தாக்கும் நீரிழிவு நோய்
» இளம்பருவ பெண்களை அதிகம் தாக்கும் பி.சி.ஓ.எஸ். நோய்
» பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்
» பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
» இளம்பருவ பெண்களை அதிகம் தாக்கும் பி.சி.ஓ.எஸ். நோய்
» பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய்
» பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum