மாதவிலக்கு முதல் கடைசி காலம் வரை தொல்லைதரும் `பி.சி.ஓ.டி.'
Page 1 of 1

பெண்கள் பூப்படைய தொடங்குவதில் இருந்து அவர்கள் திருமணமாகி கர்ப்பம் தரிப்பது வரையும், அதற்கு பின்னால் அவர்கள் கடைசிக்காலம் வரையும் தொந்தரவு தருவதாக அமைவது `பாலிசிஸ்டிக் ஓவரியன் டீசிஸ்' எனப்படும் `பி.சி.ஓ.டி'! இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு சினைப்பையில் 15-20 சிறிய நீர்க்கட்டிகள் காணப்படும்.
ஆண்ட்ரோஜன் என்பது ஆண்மைத்தன்மை கொண்ட ஹார்மோன். இது பெண்களின் உடலில் அதிகமாக சுரப்பது இந்த பாதிப்பிற்குரிய காரணமாகும். அதனால் ஆண்களைப்போல் மீசை வளருதல்- தாடி வளருதல்- வழுக்கை விழுதல்- கரகரப்பான குரல் தோன்றுதல் போன்றவை வெளிப்படையாக தெரியும் மாற்றங்களாகும்.
உடலில் பல பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும். இந்த பாதிப்பு பருவமடையும் காலத்தில் இருந்தே தொடங்கிவிடும். உடல் பருமனும், தேவையற்ற முடிவளர்ச்சியும் அவர்களை கவலைப்படுத்தும். பூப்படையும் காலத்தில் இருந்தே கோளாறு தோன்றும். மாத விலக்கு சுழற்சி சரியாக இருக்காது. மாதவிலக்கு தோன்றவும்- பின்பு அதை நிறுத்தவும் அவர்கள் மாதந்தோறும் மாத்திரை சாப்பிடவேண்டிய நிலை உருவாகும்.
சிலருக்கு உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். சினை முட்டை வளர்ச்சியிலும் இவர்களுக்கு சிக்கல் ஏற்படும். அதனால் திருமணத்திற்கு பிறகு கருத்தரிப்பது நெருக்கடிக்கு உள்ளாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களில் 60 சதவீதம் பேருக்கு, கருமுட்டை வளர்ச்சிக்குறைபாடே குழந்தையின்மைக்கான காரணமாக இருக்கிறது.
அவர்களில் 40 முதல் 50 சதவீதம் பேர் பி.சி.ஓ.டி. பாதிப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இவர்கள் இடுப்பு பருத்துக்காணப்படும்.
ஆசியா கண்டத்தில் பெரும்பாலான நாடுகளிலும் ஈராக், எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. நமது உடலில் ஹார்மோன் சுரப்பதற்கு, அதற்கான `ஜீன்' துணைபுரிகிறது. அந்த ஜீன்களில் குறைபாடு இருந்தால், அந்த ஹார்மோன் சுரப்பிலும் சிக்கல் ஏற்படும்.
பெண் உடலில் `பி.ஒய்.பி.11.ஏ' என்ற ஜீனில் குறைபாடு தோன்றினால் அது, ஆண்ட்ரோஜன் உற்பத்திக்கு காரணமாகிறது. இந்த ஜீன் குறைபாடு ஏற்பட்டால் உடலில் உள்ள பலவிதமான சுரப்பிகளும் ஆண்ட்ரோஜன் ஹார்மோனை சுரக்கத் தொடங்கிவிடும். இதனால் பி.சி.ஓ.டி. தோன்றும். இந்த பாதிப்பு ஜீன்களால் பாரம்பரியமாகவும் தொடரும்.
40 வயதுக்கு மேல் பி.சி.ஓ.டி. தொந்தரவு இருப்பவர்களில் 15 முதல் 20 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வரும் சூழல் அதிகம். பெண்களின் உடலில் `பி.என்.டி.ஆர்' என்பது இன்சுலின் உற்பத்தி செய்யும் ஜீன் ஆகும். பி.சி.ஓ.டி.யால் இந்த ஜீன் பாதிக்கப்படும்போது, அந்த பெண்களுக்கு சர்க்கரை நோய் தோன்றக்கூடும்.
பி.சி.ஓ.டி. தொந்தரவு இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படலாம். ரத்த அழுத்தம் ஏற்படும்போது இதய நோய் வரும் சூழல் அதிகரிக்கும். ஒன்றிரண்டு சதவீதம் பேருக்கு சினைப்பை புற்று நோய் தோன்றலாம். ஒரு சதவீதம் பேருக்கு கருப்பை புற்றுநோய் வரலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால், மார்பக புற்றுநோயும் உருவாகலாம்.
பி.சி.ஓ.டி. பிரச்சினை இருப்பவர்கள் கர்ப்பமாகிவிட்டால், கர்ப்பகாலத்திலும்- பிரசவத்திலும் நெருக்கடிகள் தோன்றக்கூடும். நஞ்சு குறைபாடு, குறை பிரசவம் போன்றவை தோன்றும். - டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மன அழுத்தம் தரும் மாதவிலக்கு
» மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
» மாதவிலக்கு வலி குறைய
» மாதவிலக்கு வலி குறைய
» மன அழுத்தம் தரும் மாதவிலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum