மெனோபாஸ் ஒரு விளக்கம்
Page 1 of 1
மெனோபாஸ் ஒரு விளக்கம்
மாத விலக்கு முற்றிலும் நின்றுவிட்ட காலத்தையே மெனோபாஸ் என்கிறோம். இந்நிலைக்கு பிறகு மாதவிலக்கு ஏற்படுவதில்லை. மாதவிலக்கு நிற்கும் இந்த கால கட்டத்தில் வியர்வை பெருக்கம் ஏற்படும். மன நிலையில் குழப்பம் ஏற்படும். எலும்பு மூட்டுகளில் வலியும், அசதியும் ஏற்படும். உடலுறவில் ஈடுபாடு இருக்காது. இன்னும் சொல்லப் போனால் வாழ்வையே இழ்ந்தது போன்ற உணர்வுகள் தலைகாட்டும்.
மனநிலையில் ஏற்படும் குழப்பத்தால் அடிக்கடி மறதி ஏற்படும். சிறுசிறு விசயங்களுக்குகூட எரிச்சல், கோபம் ஏற்படும். உடலில் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் முக்கியமான ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுகிறது.ஒரு சிலருக்கு ஹார்மோன் சுரப்பே இருக்காது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் பிறப்புறுப்பின் ஈரத்தன்மை காய்ந்து விடும்.
பிறப்புறுப்பின் உட் பகுதி சுருங்கி விடும். இச்சூழலில் உடலுறவின்போது ஏற்படும் உராய்வினால் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு வலியை உண்டாக்கும். சிறுநீர்ப் பாதையில் நோய்க்கிருமித்தொற்று ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உடலுறவை தள்ளிப்போடுவதற்காக, கணவரிடம் சண்டையிடுவதும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவும் செய்வார்கள்.
இது போன்ற சமயங்களில் பெண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக முக்கியம். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து விட்ட நிலையில் சில பெண்களது முகத்தில் ஆண்களைப் போல முடி வளரலாம். தோலின் மேற்பகுதி வறண்டு சுருக்கங்கள் ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் குறைந்து விடுவதால் எலும்புகளுக்குன்டான கால்சியம் கிடைப்பதில்லை, இதனால் எலும்புகள் தேய்மானம் உருவாகி, மூட்டு வலி உருவாகிறது.
மெனோபாஸ் ஏற்படும் போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையும் என பார்த்தோம். இந்த சமயத்தில் பாலிக்குலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் எனப்படும் எப்.எஸ்.ப் அதிகமாகச் சுரக்கும்.இதனால் பெண்ணின் பிறப்புறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். பெண் உறுப்பு சுருங்கி குறுகி விடும். யோனிக் குழாயில் வழ வழப்புத் தன்மை குறைந்து வறண்டு விடும்.
இதனால்தான் மெனோபாஸ் சமயத்தில் உடலுறவு, எரிச்சல்-வலி மிகுந்ததாக மாறுகிறது. சில பெண்கள் இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் கசிவு ஏற்பட்டு சிக்கலான சூழலை உருவாக்கும். மெனோபாஸ் காலத்தில் உடல் தசைகளில் தளர்ச்சியும் இடுப்பு தசை மற்றும் சுற்றளவு அதிகரிக்கச் செய்யும்.
எலும்புகள் வலுவிழப்பதால், சிறிய தடுமாற்றத்தில் கூட கீழே விழவும், எலும்புகள் முறிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். நரம்பு சம்மந்தப்பட்ட கோளாறுகள், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் ஏற்படும்.இது இயற்கையான சூழலில் ஏற்படும் மெனோபாஸ் காலத்தில் சந்திக்கும் பிரச்சனையாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களின் மெனோபாஸ்
» ஆண்களின் மெனோபாஸ்
» மெனோபாஸ் கால வயிற்று வலி
» மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum