பெண்களின் மெனோபாஸ்
Page 1 of 1
பெண்களின் மெனோபாஸ்
ஆண்கள் அறிய வேண்டியவை
ஒரு சிறுமி மலர்கின்ற பருவத்திலிருந்து, மாதவிடாய் நிற்கும் வரை, பெண்களின் பாடு பெரும்பாடு. மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் மெனோபாஸ் சமயத்தில் பெண்களிடையே பல மாறுதல்கள் நிகழும். அதை ஆண் புரிந்து கொண்டு பெண்ணுடன் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும்.
பெண்கள் தாயாகும் பருவம். பூப்பெய்தியதில் இருந்து மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் வரை மாதவிடாய் நிற்பது 45 லிருந்து 55 வயதுக்குள் நிகழலாம். மாதர்களின் மிக முக்கிய பொறுப்பான மக்கட்பேறு இத்துடன் முடிவடைந்து முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதம் இதுவரை சினைப்பை (Ovaries) யிலிருந்து தயாராகிவரும் ‘முட்டை’ உற்பத்தி நின்று விடுகிறது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது. மருத்துவ ரீதியாக இந்த நிலை ஆங்கிலத்தில் Meno-Pause என்றும் குறிப்பிடப்படுகிறது.
பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள் Estrogen மற்றும் Progesterone. உடல் இயக்கத்துக்கும், குழந்தைகள் பெறுவதற்கும் Estrogen தேவை. Ovaries (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. Menopause இந்த 2 ஹார்மோன்களின் உற்பத்தி குறையும் போது ஏற்படுகிறது.
Menopause ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்து 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்று விடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்று விட்டால் காரணங்கள். கதிரியக்கம் (Radiation), புற்றுநோய் மருந்துகளின் பக்க விளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு (Ovaries) ரத்த ஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்து விடுவது போன்றவை. ஓவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்று விடும். இதற்கு Surgical Menopause என்பார்கள்.
ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறைகளால் Meno -pause தொல்லைகளை போக்க வல்லது உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும்.
நிரந்தரமாக நிற்கும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலிகைகள் ‘Phytoestrogen’ என்ற பொருள் உள்ள சிறந்த மூலிகைகள்.
இவை Estrogen ஹார்மோன்கள் போன்றவையே ஆனால் Estrogen சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லாதவை.
இதனால் பெண்கள் இந்த காலகட்டத்தில் எந்த வித தொல்லைகளும் இன்றி ஆயுர்வேத மருந்துகளால் பயனடையலாம்.
நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும். பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் போன்ற உணவுகள் Osteo – porosis வராமல் பாதுகாக்கும்.
• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்றவை உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.
• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.
• Menopause தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
மெனோபாஸ்ஸின் போது பெண்களின் நடைமுறைகள் மாறுபடும். எரிந்து
விழுவது, அழுவது, அதீத கோபதாபங்கள் இவையெல்லாம் சில பெண்களுக்கு உண்டாகலாம். இருபது வயதிலிருந்த எலும்புகளின் அடர்த்தி, மெனோபாஸ் ஏற்படலாம். 5-6 வருடங்களில் 20% குறைந்து விடும். எலும்பு முறிவுகள் ஏற்படலாம். இதை புரிந்து கொண்டு கணவன் மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டும்.
மனைவியும் மெனோபாஸ் செக்ஸ§க்கு ஒரு தடையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான பெண்களுக்கு மெனோபாஸ் பிறகு காதல் உணர்வு அதிகமாகும். காரணம் கருத்தரிக்கும் பயமில்லை. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆகிவிடுவதால், பொறுப்புகள் குறையும். உங்கள் உடல் நலத்திக்கேற்ப, உடலுறவு கொள்ளலாம். அதிகம் எதிர்பார்க்காமல் முடிந்த அளவு காதலில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு தடவையும் உச்சக்கட்டம் அடைய வேண்டும் என்றில்லாமல், மனைவியும் கணவனும் அந்நியோன்யமாக காதலில் சுகம் காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மெனோபாஸ் ஒரு விளக்கம்
» மெனோபாஸ் கால வயிற்று வலி
» ஆண்களின் மெனோபாஸ்
» மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!
» பெண்களின் நிலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum