தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடுவதா?: ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Go down

திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடுவதா?: ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு Empty திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடுவதா?: ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Post  ishwarya Sat May 04, 2013 5:57 pm

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 52 வயது ஆகிறது. இவர் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ரஜினி, கமலுடன் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது அரசியலில் இருக்கிறார். விரைவில் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது 52-வது பிறந்த நாளை திருப்பதி கோவிலில் கொண்டாடுவதற்காக அங்கு சென்றார். கோவிலுக்குள் சென்று வெங்கடாஜலபதியை பயபக்தியுடன் கும்பிட்டார். பின்னர் திருப்பதியில் உள்ள சீனிவாசா விருந்தினர் மாளிகைக்கு சென்று உறவினர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

ஜெயப்பிரதாவின் தாயார் கிருஷ்ணவேணி கேக் ஊட்டினார். அவர் காலில் விழுந்து ஜெயப்பிரதா ஆசிபெற்றார். திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடிய ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். திருப்பதியில் காதுகுத்து மற்றும் திருமண நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். பிறந்தநாள் கொண்டாட அனுமதி இல்லை. அந்த கட்டுப்பாடுகளை ஜெயப்பிரதா மீறி விட்டார் என்று கண்டித்தனர்.

இதுபோல் தெலுங்குதேசம் கட்சியும், ஜெயப்பிரதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெயப்பிரதாவிடம் கேட்டபோது ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை திருப்பதி கோவிலில்தான் கொண்டாடுகிறேன். 20 வருடமாக பிறந்தநாளை இக்கோவிலில் கொண்டாடி வருகிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடுவதா?: ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» திருப்பதி கோவிலில் நயன்தாரா!
» திருப்பதி கோவிலில் கணவருடன் ஜெனிலியா தரிசனம்
» திருப்பதி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்
» திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum