திருப்பதி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்
Page 1 of 1

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா-நடிகர் தனுஷ் தம்பதிகளுக்கு யாத்ரா(வயது 3), லிங்கா(1) என 2 மகன்கள் உள்ளனர். அதில் லிங்காவுக்கு திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை திருப்பதிக்கு வருகை தந்தார்.
அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜு வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் உள்பட குடும்பத்தினர் 16 பேருடன் சாமி தரிசனம் செய்தார். சுமார் 1/2 மணி நேரம் தரிசனம் செய்த அவர்கள் பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு துணை அதிகாரி சீனிவாசராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் தீர்த்தப்பிரசாதங்கள் கொடுத்து ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கோவிலில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றனர். ரஜினிகாந்த்துடன் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் வந்திருந்தார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, `நான் உடல் நலிவுற்றிருந்தபோது ஊடகங்கள் எனது உடல்நலம் குறித்து மிகுந்த அக்கறையை வெளிப்படுத்தி இருந்தன. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலகுறைவு காரணமாக `ராணா’ படத்தில் என்னால் நடிக்கமுடியாமல் போயிற்று. இன்னும் 2 மாதங்களில் ராணா படத்தில் நடிக்க இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதி கோவிலில் நயன்தாரா!
» திருப்பதி கோவிலில் கணவருடன் ஜெனிலியா தரிசனம்
» திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடுவதா?: ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

» திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 3/4 கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum