தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் நயன்தாரா படம்

Go down

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் நயன்தாரா படம் Empty தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் நயன்தாரா படம்

Post  ishwarya Sat May 04, 2013 5:34 pm

நாகார்ஜூனா ஜோடியாக ‘கிரீச்விருத்து’ என்ற தெலுங்கு படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ந் தேதி ஆந்திராவில் ரிலீசாகிறது. அதே நாளில் தமிழிலும் இப்படத்தை ‘லவ் ஸ்டோரி’ என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இப்படத்துக்கான தமிழ் வசனத்தை ஏ.ஆர்.கே. ராஜராஜா எழுதியுள்ளார். தமிழ் டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

ராஜராஜா இதுகுறித்து கூறும்போது, லவ் ஸ்டோரி படத்துக்கு தமிழகத்திலும், ஆந்திராவிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் தசரத். இவர் ஏற்கனவே இயக்கிய ‘சந்தோஷம்’, ‘மிஸ்டர் பர்பெக்ட்’ ஆகிய இரு படங்களும் வெற்றிகரமாக ஓடின.

‘லவ் ஸ்டோரி’ படம் காதல், ஆக்ஷன், குடும்ப சென்டிமென்டில் தயாராகியுள்ளது. இதில் காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஜோடியாக நிலா நடித்துள்ளார். கோட்டா சீனிவாசராவ், ஜே.பி.ரெட்டி, கே.விஸ்வநாத், எம்.எஸ்.நாராயணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

தாசரி நாராயணராவ் வழங்க குரு பிரம்மா ஆர்ட்ஸ் சார்பில் பத்ரகாளி பெத்தபாபு இதனை தயாரித்துள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ளார். எஸ்.ரவீந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum