தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா துணையோடு தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்!

Go down

நயன்தாரா துணையோடு தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்! Empty நயன்தாரா துணையோடு தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்!

Post  ishwarya Fri Apr 05, 2013 1:10 pm

தெலுங்கில் முன்னணி நடிகரான கோபிசந்த், நயன்தாரா துணையோடு நேரடி தமிழ்
படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார். தமிழில் ஜெயம் ரவி, சதா நடிப்பில்
வெளிவந்த ஜெயம் படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் கோபிசந்த்.
அதன்பிறகு தெலுங்கில் சவுரியம், வர்ஷம், ரணம், கோலிமார் உள்ளிட்ட பல
படங்களில் ஹீரோவாக நடித்து இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார். இவர்
இப்போது முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
கூடவே அவருக்கு ஜோடியாக சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா
நடிக்கிறார். நயன்தாரா-கோபிசந்த் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
இவர்களுடன் வேட்டை படத்தில் வில்லனாக நடித்த அஷ்ரத் ராணா மற்றும் முன்னணி
நட்சத்திரங்கள் பலரும் நடிக்கவுள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை “தேவதையை கண்டேன்”, “திருவிளையாடல்
ஆரம்பம்”, “மலைக்‌கோட்டை” போன்ற வெற்றி படங்களை இயக்கிய பூபதி பாண்டியன்
இயக்‌குகிறார். “உத்தமபுத்திரன்”, “ஒஸ்தி”, “இஷ்டம்”, “சமரன்” போன்ற
படங்களை தயாரித்த ஜெயபாலாஜி ரியல் மீடியா சார்பில் கோமரி வெங்கடேஷ் வழங்க
தண்டரா ரமேஷ் தயாரிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். அனைத்து
தரப்பு மக்களும் ரசிக்கும் வண்ணம் கமர்ஷியல், செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷ்ன்
படமாக இப்படம் உருவாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் சென்னையில் துவங்கும்
இப்படத்தின் சூட்டிங் ‌தொடர்ந்து கேரளா, மைசூர், மங்களூர் உள்ளிட்ட பல
பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

தமிழ் நடிகர்கள் தெலுங்கு படவுலகம் பக்கம் கவனம்‌ செலுத்தி
கொண்டிருக்கையில், தெலுங்கு படவுலக முன்னணி நாயகன் கோபிசந்த் தமிழுக்கு
வருவதும், காதல் வாழ்க்கை கசந்து மீண்டும் சினிமாவில் நயன்தாரா நடிக்க
ஆரம்பித்து இருப்பதும், முதன்முறையாக கோபிசந்த் உடன் இணைந்து நடிப்பதும்
இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum