தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ரீமாகல்லிங்கல் ரகசிய திருமணம்?

Go down

நடிகை ரீமாகல்லிங்கல் ரகசிய திருமணம்? Empty நடிகை ரீமாகல்லிங்கல் ரகசிய திருமணம்?

Post  ishwarya Sat May 04, 2013 5:05 pm

பிரபல மலையாள நடிகை ரீமாகல்லிங்கல் தமிழில் யுவன் யுவதி படத்தில் பரத் ஜோடியாக நடித்தார். ரீமா கல்லிங்கலுக்கும் மலையாள பட இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக மலையாள பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆஷிக் அபு ஏற்கனவே ரீமா கல்லிங்கலை கதாநாயகியாக வைத்து 22 பிமேல் கோட்டயம் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரீமாகல்லிங்கலுக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது கிடைத்தது. மேலும் பல விருதுகளையும் இப்படத்தில் பெற்றார்.

இதையடுத்து ரீமாகல்லிங்கலுக்கும் டைரக்டர் ஆஷிக் அபுவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதல் வளர்த்தனர். தற்போது திருமணம் செய்து கொண்டதாக இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது. ஆஷிக் அபுவிடம் இதுகுறித்து கேட்டபோது திருமணத்தை உறுதி படுத்தவில்லை.

எனக்கு திருமணம் நடந்தால் அது ரகசியமாக இருக்காது. உலகம் அறிய நடக்கும் என்றார். ரீமா கல்லிங்கலோ திருமணம் பற்றிய செய்திக்கு பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum