தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்: மறைத்த விஷயம் அம்பலமானது

Go down

நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்: மறைத்த விஷயம் அம்பலமானது Empty நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்: மறைத்த விஷயம் அம்பலமானது

Post  ishwarya Sat Mar 16, 2013 3:51 pm

பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி. இவருக்கு 34 வயது ஆகிறது. ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இருக்கிறார். தமிழில் கமலுடன் 'ஹேராம்' படத்தில் நடித்தார். இப்படம் 2000-ம் ஆண்டில் வெளியானது. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அமிதாப்பச்சனுடன் 'பாம்பே டாக்கீஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணிமுகர்ஜிக்கும் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குனரான யாஷ் சோப்ரா மகன் ஆதித்யா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கள் பரவின.

ஆனால் இதை அவர்கள் மறுத்தனர். நண்பர்களாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் இல்லை என்று கூறி வந்தார்கள். ஆனாலும் ராணி முகர்ஜியும், ஆதித்ய சோப்ராவும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மரணம் அடைந்த யாஷ் சோப்ராவின் உருவச்சிலை சிறப்பு விழா மும்பையில் நடந்தது. இதில் யாஷ் சோப்ராவின் குடும்பத்தினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பழைய நடிகர் சத்ருகன் சின்ஹா கலந்து கொண்டார்.

சிலையை திறந்து வைத்து சத்ருகன் சின்ஹா பேசும்போது இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். ராணி சோப்ராவையும் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டார். ராணி முகர்ஜியைத்தான் அவர் ராணி சோப்ரா என குறிப்பிட்டார். இதன் மூலம் ராணி முகர்ஜியின் ரகசிய திருமணம் அம்பலமானது.

இவர்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த குடும்பத்தினர் சத்ருகன் சின்ஹா பேச்சை கேட்டு திகைத்தனர். ராணி முகர்ஜியும் வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டார். சினிமாவில் மார்க்கெட்டை தக்கவைக்கவே திருமண விஷயத்தை ராணி முகர்ஜி மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum