தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தி நடிகர் பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

Go down

இந்தி நடிகர் பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருது Empty இந்தி நடிகர் பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

Post  ishwarya Sat May 04, 2013 5:03 pm

திரைத்துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில், தாதா சாகேப் பால்கே விருது மிக உயரிய விருதாகும். இந்திய சினிமாவுக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டி மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பால்கே விருது இந்தி நடிகர் பிரானுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் 60-வது நபர், பிரான் ஆவார். இந்த விருதானது, தங்கத் தாமரை பதக்கம், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.

1920 முதல் 1990 வரையில் இந்தி சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக புகழ்பெற்று விளங்கிய பிரான், இதுவரையில் 350 படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு அவரது பெயர் சி.என்.என். டாப்-25 ஆசிய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றது. இதுதவிர, துணை நடிகர் விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2001ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தருக்கு இந்த பால்கே விருது வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒருவருக்கும் வழங்கப்படவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகிப் பால்கே விருது
» அருங்காட்சியகமாகும் தாதா சாகிப் பால்கே வீடு
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» டைரக்டர் பாலசந்தருக்கு பால்கே விருது! ஜனாதிபதி இன்று வழங்குகிறார்!!
» நடிகர் ஷாருக்கானுக்கு மிக மோசமான நடிகர் விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum