தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகிப் பால்கே விருது

Go down

நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகிப் பால்கே விருது  Empty நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு தாதா சாகிப் பால்கே விருது

Post  ishwarya Tue Mar 19, 2013 12:45 pm

வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதான, தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படுகிறது. பிரபல சினிமா இயக்குநர் சத்யஜித்ரே, கடந்த 1959-ம் ஆண்டு இயக்கி, வெளியான 'அபூர் சன்சார்' என்ற சினிமா மூலம், திரையுலகிற்குள் நுழைந்தவர் சௌமித்ரா சட்டர்ஜி, 77. சத்யஜித்ரே இயக்கிய 14 சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து, அவரது ஆஸ்தான "ஹீரோ என்று அழைக்கப்பட்டார். தவிர, 'தேவி', 'சாருலதா', 'காரேபைரி' போன்ற படங்களிலும் நடித்து, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார். சத்யஜித்ரே மட்டுமின்றி, தபன் சின்கா, மிரினல் சென் போன்ற மற்ற பிரபல வங்கமொழி இயக்குநர்கள் இயக்கிய சினிமாக்களிலும், இவர் நடித்துள்ளார். இந்நிலையில், திரையுலகில் முத்திரை பதித்த சட்டர்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதான, தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சௌமித்ரா சட்டர்ஜி கூறுகையில், "எனது நடிப்பிற்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் தான் இந்த விருது என்றார். கடந்த 2004-ல், இவர் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ஜி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தி நடிகர் பிரானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
» அருங்காட்சியகமாகும் தாதா சாகிப் பால்கே வீடு
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» டைரக்டர் பாலசந்தருக்கு பால்கே விருது! ஜனாதிபதி இன்று வழங்குகிறார்!!
» நடிகர் ஷாருக்கானுக்கு மிக மோசமான நடிகர் விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum