தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடித்து விட்டு ஆடும் குத்தாட்ட காட்சிகள் வேண்டாம்: எஸ்.வி.சேகர்

Go down

குடித்து விட்டு ஆடும் குத்தாட்ட காட்சிகள் வேண்டாம்: எஸ்.வி.சேகர் Empty குடித்து விட்டு ஆடும் குத்தாட்ட காட்சிகள் வேண்டாம்: எஸ்.வி.சேகர்

Post  ishwarya Sat May 04, 2013 2:49 pm

மிதுன்- மான்ஸி ஜோடியாக நடிக்கும் படம் மடிசார் மாமி. ரஞ்சித்போஸ் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர் பங்கேற்று பேசியதாவது:-

மடிசார் மாமி படத்தில் டாஸ்மாக் கடையில் சிலர் குத்தாட்டம் ஆடுவதுபோல் பாடல் காட்சி உள்ளது. டாஸ்மாக் போர்டையும் அடிக்கடி காட்டுகிறார்கள் மதுக்கடையை ஏன் இப்படி விளம்பர படுத்துகிறார்கள். இப்படியெல்லாம் குடிப்பழக்கத்தை ஊக்குவித்தால் எப்படி நம்மை மதிப்பார்கள்.

சினிமாக்காரர்களுக்கு வீடு தர மறுப்பதாக கூறப்படுகிறது. இப்படி குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் காட்சிகள் வைத்தால் எப்படி தருவார்கள். எனவே இதுபோன்ற காட்சிகளை படங்களில் வைக்க வேண்டாம். மடிசார் மாமி படம் டிரெய்லரில் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. நன்றாக ஓட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

டைரக்டர் முக்தாசீனி வாசன் விழாவில் பேசும்போது படத்தின் கதாநாயகி மான்ஸி நெற்றி பொட்டு வைக்காமல் வந்ததை கண்டித்தார். மடிசார் மாமி என்று படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர். ஆனால் படத்தின் கதாநாயகி நெற்றில் பொட்டு இல்லை. எங்கள் ஊரில் பொட்டு வைக்காத பெண்களை விதவை என்பார்கள் என்று பேசினார்.

இயக்குனர் ரஞ்சித் போஸ் பேசும்போது படத்துக்கு மடிசார் மாமி மதனமாமா என பெயர் வைத்து இருந்தோம். ஆனால் தணிக்கை குழு மதன மாமா என்பதை நீக்கிவிட்டது என்றார். தயாரிப்பாளர்கள் விவேக்தீக்ஷித், சுஷாந்த் காட்ரு ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum