தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வி.சேகர் இயக்கத்தில் 18வது படமாக 'சரவணப் பொய்கை'

Go down

வி.சேகர் இயக்கத்தில் 18வது படமாக 'சரவணப் பொய்கை' Empty வி.சேகர் இயக்கத்தில் 18வது படமாக 'சரவணப் பொய்கை'

Post  ishwarya Sat Mar 23, 2013 12:00 pm



தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கியவர் வி.சேகர்.

இவருடைய அடுத்தப் படைப்பாக 'சரவணப் பொய்கை' எனும் திரைப்படம் உருவாகிறது. திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கும் இப்படத்தில் வி.சேகரின் மகன் கார்ல் மார்க்ஸ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகி கதாபாத்திரத்தில் வெளுத்துக்கட்டு அருந்ததி நடிக்கிறார். இவர்களுடன் விவேக், கருணாஸ் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குனர் வி.சேகர் கூறுகையில், இதற்கு முன்பு நான் இயக்கிய அனைத்துப் படங்களும் குடும்பப் பாங்கான கதைகள்தான். சாதாரண நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கையை படம் பிடித்த நான் சரவணப் பொய்கையில் காதலையும், காமெடியையும் எடுத்திருக்கிறேன். 'சரவணப் பொய்கை' என்பது முருகன் அவதரித்த இடத்தைக் குறிக்கும். அதைத் தான் தலைப்பாக்கி இருக்கிறேன். கார்ல் மார்க்ஸும் - கருணாஸும் திரையரங்கில் வேலை செய்பவர்கள். கார்ல் மார்க்ஸ் டிக்கெட் கொடுக்க கருணாஸ் டிக்கெட் கிழிப்பவர். விவேக் இந்தப் படத்தில் நடிகராகவே நடிக்கிறார் என்றார். இயக்குனர் வி.சேகர் இதுவரை 17 படங்களை இயக்கியிருக்கிறார். சரணப் பொய்கை அவருக்கு 18வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum