தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேட்டை' விளம்பரங்களில் ஹன்சிகாவை புறக்கணிக்கவில்லை: டைரக்டர் கண்ணன் விளக்கம்

Go down

சேட்டை' விளம்பரங்களில் ஹன்சிகாவை புறக்கணிக்கவில்லை: டைரக்டர் கண்ணன் விளக்கம் Empty சேட்டை' விளம்பரங்களில் ஹன்சிகாவை புறக்கணிக்கவில்லை: டைரக்டர் கண்ணன் விளக்கம்

Post  ishwarya Sat May 04, 2013 2:25 pm

ஆர்யா, ஹன்சிகா மொத்வானி, அஞ்சலி இணைந்து நடித்த ‘சேட்டை’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கான விளம்பரங்களில் தனது படங்கள் இடம்பெறவில்லை என்று ஹன்சிகா ஆத்திரப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் கண்ணனை போனில் தொடர்பு கொண்டு திட்டமிட்டு விளம்பரங்களில் தனது படத்தை புறக்கணிப்பதாகவும் படத்தில் நடித்த பல காட்சிகள் வெட்டப்பட்டு உள்ளன என்றும் கோபப்பட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டதாகவும் இணையதளங்களில் செய்தி பரவி உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் கண்ணனிடம் மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஹன்சிகாவுக்கும், எனக்கும் மோதல் இல்லை. நட்பாகவே இருக்கிறோம். ஹன்சிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், விளம்பரங்களில் அவர் படங்களை போடாமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் வந்துள்ள செய்திகள் வெறும் வதந்திதான்.

படம் ரிலீசானபோது தியேட்டரில் ஹன்சிகாவும், நானும் சேர்ந்துதான் படம் பார்த்தோம். மகிழ்ச்சியாகவே இருந்தார். மீண்டும் உங்கள் டைரக்ஷனில் நடிப்பேன் என்றார்.

‘சேட்டை’ பட விளம்பரங்களில் ஹன்சிகா படங்களும் இடம்பெறுகின்றன. படத்துக்கான 3-வது வாரம் விளம்பரங்களிலும் அவர் படம் இருக்கிறது. விளம்பர பணிகளை யு டிவி நிறுவனம் கவனிக்கிறது. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை. ஹன்சிகாவுக்கும், எனக்கும் மோதல் இல்லை. அடுத்து பி.வி.பி. படநிறுவனத்துக்காக இயக்கும் புதுப்படத்தில் ஹன்சிகா நடிப்பதற்கு அவரிடம் பேசி வருகிறோம்.

இவ்வாறு கண்ணன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum