தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரீனா கபூர் கர்ப்பம் : டைரக்டர் மதுர் பண்டார்கர் விளக்கம்!!

Go down

கரீனா கபூர் கர்ப்பம் : டைரக்டர் மதுர் பண்டார்கர் விளக்கம்!! Empty கரீனா கபூர் கர்ப்பம் : டைரக்டர் மதுர் பண்டார்கர் விளக்கம்!!

Post  ishwarya Fri Apr 05, 2013 1:44 pm

கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருப்பது
குறித்து டைரக்டர் மதுர் பண்டார்கர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சயீப்
அலிகானின் காதலி கரீனா. இந்தி சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையராக
இருக்கும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த
நிலையில் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை கரீனா இதுவரை கருத்து எதுவும்
தெரிவிக்காத நிலையில், அவரை வைத்து படம் இயக்கும் டைரக்டர் மதுர்
பண்டார்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஹீரோயின் படத்தில் கரீனாகபூர், மனிஷா
கொய்ராலா உள்ளிட்ட பல நாயகிகள் நடிக்கின்றனர். நடிகைகளின் சொந்த வாழ்க்கையை
இந்த படத்தில் சொல்கிறேன். இதில் கரீனா கபூர் கர்ப்பிணி வேடத்தில்
நடிக்கிறார். அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற படத்தை நான்தான்
இன்டர்நெட்டில் வெளியிட்டேன். அதை பார்த்தவர்கள் கரீனாகபூர் நிஜமாகவே
கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர். இந்த கர்ப்ப
செய்திக்கு ஒருவகையில் நானும்தான் காரணம், என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் கரீனா கபூர் கர்ப்பம் அல்ல, ஹீரோயின் படத்தில் அவருடைய கேரக்டர் தான் என்பது உறுதியாகி இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum