தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கனடாவில் கச்சேரி… கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி!

Go down

கனடாவில் கச்சேரி… கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி! Empty கனடாவில் கச்சேரி… கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி!

Post  ishwarya Mon Apr 01, 2013 6:13 pm

சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி.கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா’.
இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் – சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா.
முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் நவம்பர் 3-ம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
விரைவில் டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வரவிருக்கிறது.

இதன் பிறகு கலிபோர்னியாவிலும் ஒரு நிகழ்ச்சி நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி முன் அவர் இரு நிகழ்ச்சிகளை சென்னையில் செய்கிறார். ஒன்று வரும் ஆகஸ்ட் 20-ல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார்.
அடுத்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி நீதானே என் பொன்வசந்தம் பட இசைவெளியீட்டில் அந்தப் பட பாடல்களை நேரடியாக மேடையில் இசைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum