கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்: டோனி
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பெற்றது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த 24-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 169 ரன் எடுத்தது. தொடக்க வீரர் மைக்ஹஸ்சி 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ரன் எடுத்தார். கேப்டன் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 23 பந்தில் 44 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும்.
பின்னர் விளையாடிய டெல்லி அணி 17.3 ஓவரில் 83 ரன்னில் சுருண்டது. கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். மொகித் சர்மா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் 170 ரன் இலக்கு என்பது போதுமானதாக இல்லை. மைக்ஹஸ்சியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. இதனால் பேட்டிங்கில் எங்களால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த வெற்றி சிறப்பானது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி பெற்றோம்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஜெயவர்த்தனே கூறும்போது, எங்கள் அணி வீரர்களின் ஆட்டத்தில் எப்படி தவறு நடக்கிறது என்பதை பற்றி தான் சிந்தித்து வருகிறோம். தொடர் தோல்வியை எதிர் பார்க்கவில்லை. இனிவரும் போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நாளை (சனிக்கிழமை) சந்திக்கிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. டெல்லி அணி தொடர்ந்து 6-வது ஆட்டத்தில் தோற்று மிகவும் பரிதாப நிலையில் உள்ளது. அந்த அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 21-ந்தேதி எதிர்கொள்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெற்றி சமையல் 8: பொரியல், பச்சடி, கூட்டு
» டோனி தி பாஸ்
» ஐ.பி.எல் தொடரின் மெகா சிக்சர் அடித்தார் டோனி!
» ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம்: டோனி கருத்து
» ரெய்னா வற்புறுத்தலால் முன்னதாக களமிறங்கினேன் – டோனி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum