ஐ.பி.எல் தொடரின் மெகா சிக்சர் அடித்தார் டோனி!
Page 1 of 1
ஐ.பி.எல் தொடரின் மெகா சிக்சர் அடித்தார் டோனி!
ஐ.பி.எல் தொடரின் தகுதி நீக்கச் சுற்றில் அணித்தலைவர் டோனியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் ”பிளே-ஆப்” சுற்றின் இரண்டாவது போட்டியில்(எலிமினேட்டர்) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.
கடைசி கட்டத்தில் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியும், டிவைன் பிராவோவும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 29 பந்தில் 73 ஓட்டங்கள் சேர்த்தனர். குல்கர்னி ஓவரில் “ஹாட்ரிக்” பவுண்டரி விளாசினார் டோனி. பின்பு பிராங்க்ளின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.
தொடர்ந்து மலிங்கா, ஆர்.பி.சிங் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார். மலிங்கா வீசிய போட்டியின் 19வது ஓவரில் பிராவோ 2 பவுண்டரி, டோனி ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 18 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் பிராவோ 2 சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த டோனி அரைசதம் கடந்தார். முதல் 9 ஓவரில் 47 ஓட்டங்கள் தான் எடுக்கப்பட்டது. கடைசி 11 ஓவரில் மட்டும் 140 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. டோனி 51(20 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு அதிரடி தொடக்கம் தந்த டிவைன் ஸ்மித் 38 ஓட்டங்களிலும் சச்சின் டெண்டுல்கர் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த துடுப்பாட்டக்காரர்களான தினேஷ் கார்த்திக்(6), ரோகித் சர்மா(14) ஆட்டமிழந்தனர். அஷ்வின் வலையில் அம்பதி ராயுடு(11) சிக்கினார். பிராவோ பந்தில் பிராங்க்ளின்(13) வீழ்ந்தார். அணித்தலைவர் ஹர்பஜன்(1) தாக்குப்பிடிக்கவில்லை.
மலிங்கா 17 ஓட்டங்கள் எடுத்தார். பிராவோ பந்தில் பொல்லார்டு(16) வெளியேற, மும்பை நம்பிக்கை தகர்ந்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. குல்கர்னி(10), ஆர்.பி.சிங்(1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட சென்னை அணியின் அணித்தலைவர் டோனி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மேலும், நேற்று ஆல்பி மார்கல் பந்தில் மும்பை அணியின் பிராங்க்ளின் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 700வது சிக்சராக அமைந்தது.
பிராங்களின் பந்தில் டோனி தனது வழக்கமான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் 112 மீ. தூரத்துக்கு ஒரு சிக்சர் அடித்தார். இது இத்தொடரின் மெகா சிக்சராக அமைந்தது.
நேற்று 20 பந்தில் டோனி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இத்தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் டெல்லி அணியின் ஷேவாக்குடன்(20 பந்து, எதிர், ராஜஸ்தான்)இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
முதலிடத்தில் ராஜஸ்தான் அணியின் ஓவைஸ் ஷா(19 பந்து, எதிர், பெங்களூர் உள்ளார்). தவிர, ஐ.பி.எல்., வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை டோனி பெற்றார்.
நேற்று வெற்றி பெற்ற சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» நடிகை பார்வதி மேனனை அடித்தார் தனுஷ்?
» மெகா மகளிர் விருதுகள்!
» டோனி தி பாஸ்
» 31வது சதம் அடித்தார் மஹேல!
» நடிகை பார்வதி மேனனை அடித்தார் தனுஷ்?
» மெகா மகளிர் விருதுகள்!
» டோனி தி பாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum