ரெய்னா வற்புறுத்தலால் முன்னதாக களமிறங்கினேன் – டோனி!
Page 1 of 1

Dhoni
இங்கிலாந்துக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 155 ஓட்டங்களில் சுருண்டது. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்தியா 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வீராட் கோஹ்லி 77 ஓட்டங்களும், கம்பீர் 33 ஓட்டங்களும் எடுத்தனர். டோனி 6வது வீரராக ஆடி வருகிறார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் ரெய்னாவுக்கு முன்னதாக 5வது வீரராக களமிறங்கி ஆடினார்.
தனது சொந்த ஊரில் போட்டி நடைபெறுவதால் ரசிகர்களின் ஆதரவு காரணமாக டோனி முன்னதாக ஆடி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவை என்று இருந்தபோது தான் அவர் களமிறங்கினார். ஆனால் ரெய்னாவின் வற்புறுத்தலால் தான் முன்னதாக களமிறங்கினேன் என்று டோனி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், போட்டி நடந்து கொண்டு இருக்கும் போது ரெய்னாவுக்கு முன்னதாக நான் ஆட செல்வது என்று திட்டமிடவில்லை.
ரெய்னாவுக்கு அடுத்து நான் அமர்ந்து இருந்தேன். அவர் என்னிடம் எனக்கு முன்பு நீங்கள் ஆட செல்லுங்கள் என்றார்.
நான் முதலில் தயங்கினேன். அவர் என்னை தொடர்ந்து வற்புறுத்தியதால் நான் முன்னதாக களம் இறங்கி ஆடினேன் எனவும் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 4வது ஆட்டம் வருகிற 23ம் திகதி (புதன்கிழமை) மொகாலியில் நடைபெற உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணத்திற்கு முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?
» நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா!
» ஒரு நாள் முன்னதாக அலெக்ஸ்பாண்டியன்!
» திருமணத்திற்கு முன்னதாக புரிதல் அவசியம்
» “நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum