தமிழ் படங்களில் தமிழ் நடிகர், நடிகைக்கே வாய்ப்பு: ராதாரவி வற்புறுத்தல்
Page 1 of 1

புதுமுகங்கள் திலீப்குமார்- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க திருப்புகழ் என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. அர்ஜுன் ராஜா, இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:-
தமிழில் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் வருகின்றன. ரூ.20 கோடி, ரூ.30 கோடி என செலவிட்டு பெரிய பட்ஜெட் படங்களையும் எடுக்கிறார்கள். பெரிய படங்களை வெளியிட்டு ரூ.6 கோடி நஷ்டம் ரூ.8 கோடி நஷ்டம் என புலம்புவதை பார்க்க முடிகிறது. நஷ்டமான பணத்தை மட்டுமே வைத்து 4 சிறு படங்களை தயாரித்து விடலாம்.
சிறு பட்ஜெட்டில் படங்களை எடுக்க பலரும் முன் வரவேண்டும். அப்போதுதான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். தமிழ் படங்களில் தெலுங்கு மலையாளம் என பிற மொழி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்கிறார்கள். புதுமுகங்களாகவும் அவர்களையே அறிமுகப்படுத்துகின்றனர்.
சமீபத்தில் நான் ஒரு ஊருக்கு சென்று இருந்தபோது தமிழ், படங்களில் தமிழ் முகங்களையே காணமுடியவில்லை என ஆதங்கப்பட்டனர். ஆந்திராவில் இருப்பவர்கள் தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்வதை எதிர்க்கின்றனர்.
தெலுங்கு படங்களில் தமிழ் நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பது இல்லை,. கேரளாவில் சரத்குமார் நடித்த மலையாள படங்கள் ஹிட்டானதால் மேற்கொண்டு அவரை அங்கு நடிக்க விடாமல் ஓரங்கட்டுகின்றனர். அதுபோல் நாமும் சொரணையோடு இருக்க வேண்டும்.
தமிழ் படங்களில் தமிழ், நடிகர், நடிகைகளை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும். வேற்று மொழி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க வேண்டாம்.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
நடிகர்கள் பாக்யராஜ், பிரபுராஜ், டைரக்டர் எழில், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி கே.எஸ். சீனிவாசன், ஆகியோர் பங்கேற்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராதாரவி - முதல் தென்னிந்திய நடிகர்
» நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கம்?: ராதாரவி பேட்டி
» 7 ஆம் அறிவு பட சர்ச்சை வசனம் நீக்கம் இலங்கையில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்
» “தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்” – தமன்னா
» தமிழ் படங்களில் ஆபாசம் திணிப்பு: கவிஞர் வைரமுத்து புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum