தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ. 5 லட்சம் சம்பளம்: தமிழ் படங்களில் கலக்கும் புதுமுக நடிகைகள்

Go down

ரூ. 5 லட்சம் சம்பளம்: தமிழ் படங்களில் கலக்கும் புதுமுக நடிகைகள் Empty ரூ. 5 லட்சம் சம்பளம்: தமிழ் படங்களில் கலக்கும் புதுமுக நடிகைகள்

Post  ishwarya Thu Apr 25, 2013 12:25 pm

தமிழ் படங்களில் புதுமுக நடிகைகள் வருகை அதிகரித்துள்ளது. நயன்தாரா, திரிஷா, அசின், தமன்னா போன்ற பெரிய நடிகைகள் சம்பளம் ரூ. 1 கோடி வரை உயர்ந்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள கதாநாயகிகளும் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்.

சிறிய பட தயாரிப்பாளர்களால் இவர்களை ஒப்பந்தம் செய்ய முடிய வில்லை. சமீபகாலமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை நஷ்டம் அடையாமல் ஓரளவு லாபம் ஈட்டி தருகின்றன.

புதுப்படங்களுக்கு புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதும் அதிகமாக நடக்கிறது. இந்த நடிகைகளுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை தான் சம்பளம் கொடுக்கிறார்கள். வெற்றிகரமாக ஓடும் களவாணி பட நாயகி ஓவியா புதுமுகம். கேரளாவைச் சேர்ந்தவர். இந்த படம் ஹிட்டானதால் அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்துள்ளன.

பரத் ஜோடியாக “யுவன் யுவதி” என்ற படத்தில் அர்ச்சனா கவி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவரும் கேரளா வரவு.

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் ரிமா சில்லங்கள் என்பவர் நாயகியாக அறிமுக மாகியுள்ளார்.

அய்யனார் படத்தில் ஆதி ஜோடியாக நடிக்கும் மீரா நந்தன் குறைவான சம்பளமே வாங்குகிறார். இவருக்கும் பூர்வீகம் கேரளா.

அசின், நயன்தாரா, கோபிகா, நவ்யாநாயர், மீரா ஜாஸ்மின் என பலர் மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் படங்களில் கலக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஜோடியாக கனிமொழி படத்தில் சஷான் பிரேம்ஜி என்ற புதுமுக நாயகி அறிமுக மாகியுள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்தவர். பச்சை என்கிற காத்து படத்தில் நடிக்கும் தேவதை பட்டா பட்டி படத்தில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஜோடியாக நடிக்கும் ஹரினி காந்தர்வன் படத்தில் நடிக்கும் ஹனி ரோஸ், காண்டீபன் படத்தில் நடிக்கும் ரியா, கே.வி.ஆனந்த் இயக்கும் கோ படத்தில் நடிக்கும் கார்த்திகா போன்றோரும் புதுமுகங்கள். கார்த்திகா பழைய கதாநாயகி ராதா மகள்.

மேலும் இருபதுக்கும் மேற்பட்ட புதுப்படங்களுக்கு புதுமுக நடிகைகள் தேர்வு நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» ரூ.1 கோடி சம்பளம் பேசியும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர திரிஷா, ஸ்ரேயா மறுப்பு
» தமிழ் படங்களில் தமிழ் நடிகர், நடிகைக்கே வாய்ப்பு: ராதாரவி வற்புறுத்தல்
» நிமிஷத்துக்கு ரூ.4 லட்சம் சம்பளம்
» ஒரு நாள் சம்பளம், ரூ.2 லட்சம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum