நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கம்?: ராதாரவி பேட்டி
Page 1 of 1

விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் சங்கத்தை விஷால் விமர்சித்து இருந்தார். விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தனது பேஸ் புக்கில் கண்டித்தார். இதுகுறித்து சென்னையில் நடந்த நடிகர் சங்க செயற்குழுவில் கடுமையாக விவாதிக்கப்பட்டது.
நடிகர் சங்கத்தை இழிவுபடுத்திய விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி பேசினர். இதையடுத்து விஷால் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-
விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் சங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது. விஷால் பேஸ் புக்கில் நடிகர் சங்கத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடிகர் சங்க செயற்குழுவிலும் இது குறித்து பேசப்பட்டது.
விஷால் இதுவரை நடிகர் சங்கம் கூட்டிய பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றது இல்லை. ஆனாலும் அவரது பிரச்சினைகளை சங்கம் தீர்த்து வைத்துள்ளது. லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் பிரச்சினை உருவான போது நடிகர் சங்கம் தலையிட்டது. விஷாலுக்கு பக்க பலமாக நின்று உதவியது. நானும் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் போன்றோரும் 250 படங்களுக்கு மேல் நடித்தவர்கள். பொதுக்குழுவுக்கே வராத விஷாலுக்கு எங்களை பார்த்து கேள்வி கேட்க தகுதி இல்லை.
விஷாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். 15 நாட்களுக்குள் அவர் பதில் சொல்ல வேண்டும்,. விளக்கம் அளித்த பிறகு ஏற்க கூடியதாக இருந்தால் ஏற்போம். பதில் ஏற்கும்படி இல்லா விட்டால் நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு ராதாரவி கூறினார்.
நடிகர் சங்கத்தின் மேலாளர் நடேசன் கூறும் போது செயற்குழு, உறுப்பினர்கள் முடிவின்படி விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்?
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» பரதேசியில் இருந்து பூஜா நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum