தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்

Go down

தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார் Empty தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்

Post  ishwarya Sat May 04, 2013 11:39 am

2012-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு, இந்திய சினிமாவின் நூற்றாண்டை குறிக்கும் அஞ்சல் தலையை வெளியிட்டார். பின்னர் தேசிய சினிமா விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த எழுத்தாளர், குறும்படங்கள், ஆவணப்ப்படங்களுக்கான விருதுகள் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்ப் படமான ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்திற்கு சிறந்த மாநில மொழி படத்திற்கான விருது வழங்கப்பட்டது. ‘வழக்கு எண் 18/9’ படத்தில் பணியாற்றிய ராஜாவுக்கு சிறந்த ஒப்பனைக்கலைஞர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடன வடிவமைப்புக்கான விருது விஸ்வரூபம் படத்திற்கு வழங்கப்பட்டது. அதனை உலகப்புகழ் பெற்ற நடன வடிவமைப்பாளர் பிர்ஜு மகராஜ் பெற்றுக்கொண்டார். பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்தது. அதனை ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி பாடகர் விருது சங்கர் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த எழுத்தாளருக்கான விருது பி.டி.கர்கா எழுதிய நூலுக்கு வழங்கப்படடது. சிறந்த திரை விமர்சன எழுத்துக்கான விருது பி.எஸ். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 14 மொழிகளில் 38 திரைப்படங்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிறுதொழில்களுக்கு அதிக கடன் உதவி: இந்தியன் வங்கிக்கு தேசிய விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
» 60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum