சிறுதொழில்களுக்கு அதிக கடன் உதவி: இந்தியன் வங்கிக்கு தேசிய விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
Page 1 of 1
சிறுதொழில்களுக்கு அதிக கடன் உதவி: இந்தியன் வங்கிக்கு தேசிய விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
சிறுதொழில்துறைக்கு அதிக கடன் வழங்கும் வங்கிக்கு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவன அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2012–2013–ம் நிதி ஆண்டில் சிறுதொழில்களுக்கு அதிகளவு கடன் உதவி அளித்ததற்காக இந்தியன் வங்கிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசினிடம் இந்த விருதை வழங்கினார்.சென்ற நிதி ஆண்டில் இந்தியன் வங்கி முன்னுரிமை துறைக்கு 40 சதவீதம் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் அந்த இலக்கையும் தாண்டி 42.35 சதவீதம் கடன் வழங்கியது. அதேபோல், குறு, சிறு தொழில்நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் வரையறை செய்திருந்த 20 சதவீத கடன் அளவை தாண்டி 32.18 சதவீதம் கடன் அளித்து சாதனை புரிந்துள்ளது.மேலும், குறு தொழில்நிறுவனங்களுக்கு கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த 60 சதவீத இலக்கை விஞ்சி, 72.36 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கப்பட்டு இருப்பதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்
» இந்திய சகோதரர்களுக்கு உயர் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி வழங்கினார்
» பாலாவுக்கு தேசிய விருது – பிரதீபா வழங்கினார்
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum