இந்திய பாக்ஸ் ஆபிஸை திணறடித்த இரும்பு மனிதன்
Page 1 of 1
இந்திய பாக்ஸ் ஆபிஸை திணறடித்த இரும்பு மனிதன்
அமெரிக்காவில் தயாராகும் படத்தை அங்கு வெளியிடுவதற்கு முன் பிற நாடுகளில் வெளியிட்டு தயாரிப்பு செலவுடன் லாபத்தையும் வசூலித்துவிடுகிறார்கள். அயன் மேன் 3 இந்த வாரம்தான் யுஎஸ் ஸில் வெளியாகிறது. ஆனால் சென்ற வாரம் இந்தியா உள்பட 42 நாடுகளில் படத்தை வெளியிட்டு மூன்றே தினங்களில் 1000 கோடியை வசூலித்துள்ளனர்.
FILE
அவதாருக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் ஓபனிங்கை பெற்ற படம் அயன் மேன் 3. சுமாராக 100 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். சர்வதேச அளவில் 195.3 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு 5.4 மில்லியன் டாலர்கள். ஏறக்குறைய இருபத்தைந்து கோடிகள்.
சல்மான்கான் போன்ற ஸ்டார் நடிகர்களின் பட ஓபனிங்கை அயன் மேன் 3 பெற்றிருக்கிறது. தமிழகத்தில் யாருடா மகேஷ், நான் ராஜாவாகப் போகிறேன் படங்களின் ஓபனிங்கைவிட அயன் மேன் 3 க்கு கிடைத்திருக்கும் ஓபனிங் பொpது. வெள்ளிக்கிழமை மட்டும் தமிழகத்தில் இப்படம் 53 லட்சங்களை வசூலித்துள்ளது.
இன்னும் சில வருடங்களில் ஹhலிவுட் படங்கள் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கே சவாலாக உருவெடுக்கும் என்பதன் அறிகுறியாகவே இதனை கொள்ள வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாக்ஸ் ஆபிஸை விட ரசிகர்களுக்குத் தான் பயப்படுவேன் என்கிறார் செல்வராகவன்
» ரசிகர்களை மகிழ்ச்சியில் திணறடித்த பிராவோ
» இரும்பு குதிரைகள்
» இரும்பு முள்வேலி
» இரும்பு சத்து மாத்திரைகள்
» ரசிகர்களை மகிழ்ச்சியில் திணறடித்த பிராவோ
» இரும்பு குதிரைகள்
» இரும்பு முள்வேலி
» இரும்பு சத்து மாத்திரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum