ரசிகர்களை மகிழ்ச்சியில் திணறடித்த பிராவோ
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பரபரப்பாக இருந்தது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்தது. வாட்சன் சதம் (101 ரன்) அடித்தார். இந்த சீசனில் முதல் சதம் அடித்த வீரர் அவர் ஆவார். 186 ரன் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை.
தொடக்க வீரர் முரளி விஜய் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹஸ்சி-ரெய்னா ஜோடி சிறப்பாக விளையாடியது. பவுண்டரிகளாக அடித்து ரன் ரேட்டை சிறப்பாக கொண்டு சென்றனர். 13-வது ஓவரில் ரெய்னா (51 ரன்) அவுட் ஆனார். ஹஸ்சி- ரெய்னா ஜோடி 90 ரன் சேர்த்தது.
அடுத்து டோனி களம் புகுந்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஹஸ்சி (88 ரன், 13 பவுண்டரி, 1 சிக்சர்) 17-வது ஓவரில் முதல் பந்தில் ரன்-அவுட் ஆனார். அதே ஓவரில் 3-வது பந்தில் ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார். ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டோனி களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். கடைசி 2 ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் கடைசி பந்தில் டோனி அவுட் ஆனார். சிக்சர் அடிக்க முயற்சித்த போது எல்லைக்கோட்டில் பின்னி அருமையாக கேட்ச் பிடித்தார்.
டோனி அவுட் ஆனதால் முடிவு எப்படி இருக்குமோ என்ற பதற்றம் ரசிகர்களை தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வாட்சன் வீசினார். பிராவோ- மோரிஸ் ஜோடி எதிர்க்கொண்டது.
முதல் பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் பிராவோ ரன் எடுக்கவில்லை. இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. 3-வது பந்தில் பிராவோ கவர் திசையில் சிக்சர் அடித்தார். இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களது ஆனந்த கூச்சல் வானத்தை பிளந்தது போல் இருந்தது. ஒவ்வொருவரும் கட்டி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அடுத்த 2 பந்துகளில் பிராவோ தலா 2 ரன்கள் எடுத்து சென்னையை வெற்றி பெற வைத்தார். பெற்றி பெற்றதும் பிராவோ தனக்கே உரித்தான நடனத்தை ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் 25-ந்தேதி ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் நடக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திய பாக்ஸ் ஆபிஸை திணறடித்த இரும்பு மனிதன்
» மகிழ்ச்சியில் த்ரிஷா
» மகிழ்ச்சியில் த்ரிஷா
» மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
» மகிழ்ச்சியில் மாற்றான் டீம்
» மகிழ்ச்சியில் த்ரிஷா
» மகிழ்ச்சியில் த்ரிஷா
» மகிழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
» மகிழ்ச்சியில் மாற்றான் டீம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum