இரும்பு சத்து மாத்திரைகள்
Page 1 of 1
இரும்பு சத்து மாத்திரைகள்
இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.
சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது.
அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
» பெண்களுக்கு இரும்பு சத்து
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை

» ஆபத்தாகும் மாத்திரைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum