தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெற்கு ரெயில்வே தொழிற்சங்க தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக எஸ்.ஆர்.எம்.யூ. தேர்வு

Go down

தெற்கு ரெயில்வே தொழிற்சங்க தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக எஸ்.ஆர்.எம்.யூ. தேர்வு Empty தெற்கு ரெயில்வே தொழிற்சங்க தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக எஸ்.ஆர்.எம்.யூ. தேர்வு

Post  ishwarya Fri May 03, 2013 1:03 pm

தெற்கு ரெயில்வேயின் 80 ஆயிரத்து 891 ரெயில்வே ஊழியர்கள் வாக்களித்து பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே தொழிலாளர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளை, ரெயில்வே வாரியத்திடமும், அமைச்சகத்திடமும் கொண்டு செல்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட ரெயில்வே தொழிற் சங்கங்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 25, 26, 27-ந் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யூ, டி.ஆர்.இ.யு, எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட 8 சங்கங்கள் போட்டியிட்டன. இதில் தெற்கு ரெயில்வேயின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் மொத்தம் 80 ஆயிரத்து 891 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைத்து ரெயில்வே பணியாளர்களிடமும் எந்த சங்கம் தேர்வாக போகிறது என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இருந்தே எஸ்.ஆர்.எம்.யூ. அணி மட்டும் அங்கீகாரம் பெறும் நிலை தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ஊழியர்கள் தங்களுக்குள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஓட்டு எண்ணும் பணி நேற்று மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இதில் எஸ்.ஆர்.எம்.யூ. சங்கம் 41 ஆயிரத்து 254 ஓட்டுகள் பெற்று (51 சதவீதம்) பெற்று தெற்கு ரெயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டதாக எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட டி.ஆர்.இ.யு., எஸ்.ஆர்.இ.எஸ். உள்பட பிற சங்கங்கள் 30 சதவீத ஓட்டுகள் பெறாததால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க பொதுச் செயலாளர் என்.கண்ணையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக நடைபெற்ற தேர்தலில் 60 வருடத்திற்கு பிறகு 51 சதவீத வாக்குகள் பெற்று, தெற்கு ரெயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட ஓரே தொழிற்சங்கமாக எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர், உதவி பொதுச் செயலாளர் ஈஸ்வர் லால், டிவிஷன் செயலாளர்கள், மத்திய சங்க பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் அனைத்து ரெயில்வே சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றியின் மூலம், எங்களது சங்க தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல், மற்ற அனைத்து சங்க சகோதர, சகோதரிகளுக்காகவும், ஒட்டு மொத்த ரெயில்வே ஊழியர்களுக்காக பணிபுரிவோம். மேலும் ரெயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் பணிகளை, புதிதாக ரெயில்வே பணியாளர்களை பணியில் அமர்த்தி ரெயில் பயணிகளுக்கு சேவை புரிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

6-வது சம்பள கமிஷனில் ரெயில்வே வாரியத்தால் ஒப்பு கொள்ளப்பட்டு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள பிரச்சினைகள், காலியாக உள்ள 12 ஆயிரம் பணியிடங்களை நிரப்புதல், 18 ஆயிரம் புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்பட 41 கோரிக்கைகளை ரெயில்வே வாரியம் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், ஜூலை மாதம் ஏ.ஐ.ஆர்.எப். உடன் இணைந்து அகில இந்திய அளவில் 14 லட்சம் பணியாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்த வாக்களிக்கும் பட்சத்தில், தொழிலாளர் நலனுக்காக நேரடி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு கண்ணையா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum