முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது
Page 1 of 1
முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது
இன்று காலை சென்னை தி நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர். இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் இருந்து செல்லும், பெரும்பாலான பேருந்துகள் மூன்றாவது நாளாக இரவில் நிறுத்தப்பட்டன.
விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பாமகவினரின் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டன.
இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு, பாமகவினர் அழைப்பு விடுத்துள்ளனர். ராமதாஸ் கைதைக் கண்டித்து, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!
» மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum