டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
Page 1 of 1

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25-ந்தேதி சித்ரா பவுர்ணமி இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் பா.ம.க.வினர் வேன், கார் மற்றும் பல வாகனங்களில் சென்றனர். அப்போது மரக்காணத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தை கண்டித்தும் இதுசம்பந்தமாக நீதி விசாரணை கோரியும், விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் ஏப்ரல் 30-ந்தேதி(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக காலை 11 மணியளவில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து காரில் விழுப்புரம் புறப்பட்ட டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகில் காலை 11.50 மணியளவில் வந்தார். அவரது காரை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மறித்து டாக்டர் ராமதாசிடம் உங்களை இங்கேயே கைது செய்கிறோம் என்று கூறினர்.
அதற்கு டாக்டர் ராமதாஸ், நான் இங்கு கைதாக மாட்டேன், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடமான ரெயில் நிலையம் அருகில் வைத்து கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து விழுப்புரம் நகரை நோக்கி காரில் புறப்பட்டார். பகல் 12.05 மணிக்கு ரெயில் நிலையம் முன்பு டாக்டர் ராமதாஸ் காரில் வந்தார். பகல் 12.15 மணியளவில் டாக்டர் ராமதாசை போலீஸ் அதிகாரிகள் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர்.
அதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் டாக்டர் ராமதாசை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரையும் கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருதிய போலீஸ் அதிகாரிகள், விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முகிலாம்பிகையிடம் நிலைமையை எடுத்துக்கூறினர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி முகிலாம்பிகை விழுப்புரம் காக்குப்பம் செல்லும் வழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு இரவு 7 மணி அளவில் வந்தார். அதையடுத்து டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினர் அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 (சட்ட விரோதமாக கும்பல் கூடுதல்) 188 (கூட்டு சதி செய்தல்), 7(1) ஏ சி.எல். சட்டம் (அரசுக்கு எதிராக குற்றமுரு சதி செய்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முகிலாம்பிகை முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 750 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் இரவில் விழுப்புரத்தில் இருந்து போலீஸ் வேன்கள் மற்றும் அரசு பஸ்கள் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர்.
டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு 10.40 மணியளவில் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கலவரத்தை, கட்டப்பஞ்சாயத்தை கட்டுப்படுத்துவதற்கு பதில் தமிழகத்தில் நேர்மையான, நாணயமான ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திய என்னை பழிவாங்கும் விதத்தில் என்னை கைது செய்துள்ளனர். இருந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறாது. நான் அனைத்து சிறைகளையும் பார்த்தவன். என்மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
மேற்கண்டவாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» ரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது
» நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பெங்களூரு கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum